அடிச்சான் பாரு Apple.. 48எம்பி கேமரா.. ஏ18 ப்ரோ சிப்.. அறிமுகமானது iPhone 16 Pro.. என்ன விலை?
iPhone 16 Pro and iPhone 16 Pro Max Full Specifications: ஆப்பிள் க்ளோடைம் (Apple Glowtime) நிகழ்வில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 series) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல்கள் 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா, ஏ18 ப்ரோ சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.
ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது 6.3-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேசமயம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது 6.9-இன்ச் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை விட பெரிய டிஸ்பிளேவுடன் இந்த ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதுவும் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 120Hz ப்ரோமோஷன் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் இவற்றை வேகமாக இயக்க முடியும். அதேபோல் கிரேடு 5 டைட்டானியத்தில் (titanium) இருந்து ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நான்கு நிறங்களில் இந்த புதிய ஐபோன்களை வாங்க முடியும்.
அதன்படி பிளாக் டைட்டானியம் (Black Titanium), ஒயிட் டைட்டானியம் (White Titanium), நேச்சுரல் டைட்டானியம் (Natural Titanium) மற்றும் புதிய டெசர்ட் டைட்டானியம் (new Desert Titanium) நிறங்களில் ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் இந்த புதிய ஐபோன்களின் சிப்செட் மற்றும் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
இந்த இரண்டு ஐபோன் மாடல்களும் மேம்பட்ட ஏ18 ப்ரோ சிப்செட் (A18 Pro chipset) மூலம் இயங்குகின்றன. இது 2வது-ஜென் 3nm டிரான்சிஸ்டர்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சிப்பில் 6-கோர் GPU (கிராபிக்ஸ் கார்டு) உள்ளது. இதற்கு முன்பு அறிமுகமான போன்களில் உள்ள A17 ப்ரோ சிப்பை விட 20% வேகமாக இயங்குகிறது ஏ18 ப்ரோ சிப்செட்.
அதேபோல் ஏ18 ப்ரோ சிப்செட் ஆனது நெகஸ்ட் ஜென் மெஷின் லேர்னிங் ஏக்ஸிலரேட்டர் (next-gen machine learning accelerators), ஃபாஸ்டர் யுஎஸ்பி 3 ஸ்பீடு, ProRes வீடியோ பதிவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக இந்த புதிய ஐபோன்களுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ஐபோன் 16 ப்ரோ மற்றும் மேக்ஸ் மாடல்கள் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவந்துள்ளன. அதன்படி, செகண்ட் ஜென் குவாட்-பிக்சல் சென்சார் கொண்ட 48எம்பி ப்யூஷன் கேமரா (4K120 வீடியோ பதிவு செய்யும்) + 48எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 12எம்பி டெலி போட்டோ கேமரா என ட்ரபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. எனவே இந்த புதிய ஐபோன்களின் கேமரா உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் ஸ்பேஷியல் ஆடியோ உடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இது பேச்சிலிருந்து பின்னணி ஒலிகளைப் பிரிக்க மெஷின் லேர்னிங் பயன்படுத்துகிறது. மேலும் இன்-பிரேம்-மிக்ஸ் (In-frame mix), ஸ்டூடியோ ரெக்கார்டிங் எஃபெக்ட் போன்ற அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகின்றன இந்த புதிய ஐபோன்கள்.

குறிப்பாக ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. அதிலும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆனது சிறந்த பேட்டரி ஆயுளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பின்பு வைஃபை 7 ஆதரவு இந்த ஐபோன்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16 ப்ரோ 128ஜிபி மாடலின் விலை $999 (இந்திய மதிப்பில் ரூ.83,870) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 256ஜிபி மாடலின் விலை $1199(இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம்) ஆகும். ஆனால் இந்த விலைகள் அமெரிக்க சந்தைக்கானவை.
இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மாடல் ரூ.1,19,900 விலையிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.1,44,900 விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 13-ம் தேதி இந்த புதிய ஐபோன்களை முன்பதிவு செய்யலாம். பின்பு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications