Home
Mobile

அடிச்சான் பாரு Apple.. iPhone 16 ஃபர்ஸ்ட் லுக் இதான்.. புதிய மாற்றங்கள் இதான்.. எப்போது அறிமுகம் தெரியுமா?

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) சாதனங்களை அடுத்த மாதம் உலக அளவில் அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. ஆப்பிள் ரசிகர்கள் ஏற்கனவே இந்த புதிய ஐபோன் 16 தொடர் மாடலை காண மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனிப்போடும் விதமாக சமீபத்திய லீக் தகவல் ஒன்று நமது ஆர்வத்தை இன்னும் அதிகமாக தூண்டியுள்ளது. காரணம், வெளிவரப்போகும் ஐபோன் 16 மாடலின் லைவ் புகைப்படம் இந்த லீக் மூலம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இணையத்தில் வெளிவரவிருக்கும் ஐபோன் 16 சாதனத்தின் ரியல் லைவ் இமேஜ் உடன் இந்த ஐபோன் வெளிவரும் வண்ண விருப்பங்களையும் இந்த லீக் தகவல் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வெளியான, முந்தைய ரெண்டரிகளில் காட்டப்பட்டுள்ள வடிவமைப்பைப் பொருத்துகிறது. இந்த மாடலுக்கான கேமரா வடிவமைப்பில் ஆப்பிள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அடிச்சான் பாரு Apple.. iPhone 16 ஃபர்ஸ்ட் லுக் இதான்.. புதிய மாற்றம்..

அடிச்சான் பாரு Apple.. iPhone 16 ஃபர்ஸ்ட் லுக் இதான்:

iPhone 16 தொடர் வண்ண விருப்பங்கள், ஐபோன் 16 சாதனம் வெள்ளை, பிளாக், ப்ளூ, க்ரீன் மற்றும் பிங்க் ஆகிய ஐந்து வண்ணங்களில் வரும் என்று கூறப்படுகிறது. இம்முறை மஞ்சள் நிற விருப்பத்தை ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக ஆப்பிள் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு, நிறுவனம் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவற்றை மஞ்சள் நிறத்தில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

லீக் ஆனா புகைப்படம், ஐபோன் 16 போனுக்கான தனித்துவமான பின்புற கேமரா பம்ப் வடிவமைப்பைக் காட்டுகிறது. இது செங்குத்தாக அமைக்கப்பட்ட இரண்டு கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆகிய இரண்டும் இந்த வடிவமைப்பைப் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை கடந்த ஆண்டு மாடல்களைப் போன்ற வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஒருபுறம் கூறப்படுகிறது. இருப்பினும், மற்றொரு லீக் தகவல் ப்ரோ மாடல்கள் ஐபோன் 16 போன்ற அதே கேமரா அமைப்பில் மூன்று கேமராக்களை செங்குத்தாக பெரும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய சீரிஸ் இல் ஆப்பிள் நிறுவனம் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபோன் 16 இல் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம் (Expected Specifications In iPhone 16):

ஐபோன் 16 சாதனம் 6.1" இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும், ஐபோன் 16 பிளஸ் 6.7" இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்றும் லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இரண்டு மாடல்களும் A17 ப்ரோ பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா அமைப்பில் 48MP பிரதான கேமரா மற்றும் பின்புறத்தில் 12MP இரண்டாம் நிலை கேமராவும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 12MP முன் கேமராவும் இருக்கலாம்.

கூடுதலாக, ஆப்பிளின் புதிய தலைமுறை சிப் தொடர் AI அம்சத்துடன் இயங்கக்கூடியதாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐபோன் 16 சாதனங்கள் பாஸ்ட் வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிப்பதாகவும் வதந்திகள் உள்ளன. iPhone 16 தொடரின் அனைத்து மாடல்களும் 45W USB Type-C ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 7, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 16 Live Image Leaks Shows Colour and iPhone 16 Series Specifications and Changes Expected 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X