நிஜமாவே விலை இவ்ளோ தானா.. செப்.9 Apple Event-க்கு முன்பாகவே iPhone 16, iPhone 16 Pro Max விலைகள் லீக்!
iPhone 16 Price in India: விஷயம் தெரிந்தவர்களுக்கும், டெக் ஆர்வலர்களுக்கும் செப்டமபர் 9 ஆம் தேதி எவ்வளவு முக்கியமான நாளென்று.. நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அறியாதோர்களுக்கு செப்டம்பர் 9 ஆம் தேதியன்று, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரீஸை (iPhone 16 Series) வெளியிடவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலைப்பாட்டில் ஐபோன் 16 சீரிஸின் இந்திய விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபோன் 16 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் (iPhone 16 Series Price in India) எப்படி இருக்கும்? ஆப்பிள் ஹப் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவலின்படி, ஐபோன் 16 ஆனது $799 (சுமார் ரூ. 67,100) க்கு அறிமுகம் செய்யப்படும்.

அதே சமயம் ஐபோன் 16 பிளஸ் $899 (தோராயமாக ரூ. 75,500) க்கு வெளியாகும். ப்ரோ மாடல்களை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ $1,099 (சுமார் ரூ. 92,300) க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆனது $1,199 (சுமார் ரூ. 1,00,700) க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்த விலைகள் அமெரிக்க சந்தைக்கானவை, ஆனால் இறக்குமதி வரிகள் மற்றும் கூடுதல் செலவுகள் காரணமாக இந்திய சந்தைக்கான விலைகள் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். எந்த அளவிற்கு அதிகமாக இருக்குமென்றால்.. ஐபோன் 16 சீரிஸின் விலை நிர்ணயம் பெரும்பாலும் ஐபோன் 15 சீரிஸின் விலை உடன் ஒற்றுப்போகலாம்.

ஏனென்றால் 2024 ஐபோன் மாடல்கள் ஆனது 2023 ஆம் ஆண்டில் வெளியான ஐபோன் மாடல்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காது என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 ப்ரோவின் விலையை ரூ.5,000 ஆகவும், ப்ரோ மேக்ஸின் விலையை ரூ.20,000 ஆகவும் "ஏற்கனவே" உயர்த்தியதால், ஐபோன் 16 சீரீஸின் கீழ் வரும் மாடல்களில் பெரிய அளவிலான விலை உயர்வு இருக்காது என்று கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில், ஆப்பிள் ஐபோன் 15 மாடலை போலவே ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.80,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது ரூ.90,000 க்குள் என்கிற விலைக்கு வெளியாகலாம். ப்ரோ மாடல்களை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ ஆனது ரூ.1,35,000 குள்ளும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது ரூ.1,60,000 குள்ளும் அறிமுகப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் புதிய ஐபோன் 16 சீரிஸின் கீழ் 4 புதிய மாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்றாலும் கூட, ஒரு சமீபத்திய லீக் தகவல் ஐபோன் 16 சீரிஸ் உடன் சேர்த்து ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 4) மாடலும் அறிமுகமாகும் என்று கூறுகிறது. ஆனால் இது 99.99% உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இது எதிர்பார்த்ததை விட விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்; ஆனால் பிளாக்ஷிப் மாடல்கள் ஆன ஐபோன் 16 சீரிஸ் உடன் சேர்ந்து "ஒருபோதும்" அறிமுகம் செய்யப்படாது.
ஆனால் செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று நடக்கும் ஆப்பிளின் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வில் (It's Glowtime Event), புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களுடன் சேர்ந்து ஆப்பிள் ஏர்போட்ஸ் 4 மாடலின் 2 வேரியண்ட்கள், ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மற்றும் ஐபாட் மினி 7 ஆகியவைகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 16 வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்வது எப்படி? இந்நிகழ்வு இந்திய நேரப்படி செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு - ஆப்பிளின் இணையதளத்திலும் (Apple Website), ஆப்பிள் டிவி ஆப் (Apple TV App) வழியாகவும் மற்றும் ஆப்பிள் யூடியூப் சேனல் (Apple YouTube Channel) வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.


Click it and Unblock the Notifications