iPhone 16 Price-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெயிட் பண்ணவங்களுக்கு வெயிட்டான குட் நியூஸ்.. என்னது அது?
Apple iPhone 16 Series Price: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்கள் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளன. இட்ஸ் க்ளோடைம் என்கிற பெயரின் கீழ் ஆப்பிள் நடத்தவுள்ள இந்த வெளியீட்டு நிகழ்வின் மீது "நாளுக்கு நாள்" எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டே போகிறது. ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்பதை விட இவைகள் என்ன விலைக்கு அறிமுகமாகும் என்கிற எதிர்பார்ப்பே அதிகமாக உள்ளது.
ஏனென்றால் 2024-க்கான புதிய ஐபோன் மாடல்கள் ஆனது பழைய 2023-ல் வெளியான ஐபோன் மாடல்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காது என்று கூறப்படுகிறது. அதாவது ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 ப்ரோவின் விலைகளை ரூ.5,000 மற்றும் ப்ரோ மேக்ஸின் விலையை ரூ.20,000 உயர்த்தியதால், ஐபோன் 16 சீரீஸ் மாடல்கள் ஆனது பெரிய அளவிலான விலை உயர்வை பெற அதிக வாய்ப்பில்லை.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஆப்பிள் ஹப் வழியாக கிடைத்த தகவலின்படி ஐபோன் 16 மாடலின் பேஸிக் வேரியண்ட் $799 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.67,100 க்கு) அறிமுகம் செய்யப்படலாம். அடுத்ததாக உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 க்கு (அதாவது தோராயமாக ரூ.75,500) அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,099 க்கு (சுமார் ரூ.92,300) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஐபோன் 16 சீரீஸின் ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,199 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
இவை அமெரிக்க சந்தைக்கான 'லீக்டு' விலைகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டையும் போலவே - அமெரிக்க விலையுடன் ஒப்பிடும் போது - இந்தாண்டு வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் இந்திய விலையும அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ இந்தியாவில் ரூ.1,34,900 மற்றும் ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 என அறிவிக்கப்பட்டது.
இதேபோன்ற விலையை ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களிலும் நாம் எதிர்பார்க்கலாம் அல்லது ஐபோன் 16 சீரீஸில் கூடுதலாக சேர்க்கப்பட்ட கூறுகள் மற்றும் சில பிரீமியம் அம்சங்களை கருத்தில் கொண்டு இன்னும் சில ஆயிரம் ரூபாய்கள் அதிகரிக்கலாம். சரியான விலை விவரங்கள் செப்டமபர் 9 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போதே அறிவிக்கப்படும்.
ஆப்பிளின் இட்ஸ் க்ளோடைம் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற உள்ளது. இது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதை ஆன்லைன் வழியாக பார்க்க விரும்புபவர்கள், செப்டம்பர் 9, 2024 அன்று இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு ஆப்பிளின் யூட்யூப் சேனலை அணுகலாம்.
ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரிஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? புதிய ஐபோன் 16 சீரீஸின் கீழ் (வழக்கம் போல) மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்: ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max).


Click it and Unblock the Notifications








