Home
Mobile

புதுசு வந்தது.. பழசு ரூ.65,000 விலை உயர்வு.. iPhone 16, 17, iPhone Air பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த Apple!

இந்திய மார்கெட்டில் ஐபோன் டியோ, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களானது பட்ஜெட் பிரியர்கள் கனவிலும் வாங்க முடியாத விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால், பழைய மாடல்களை வாங்கலாமே என்று நினைத்தால் அந்த மாடல்களின் விலையும் ரூ.65,000 வரையில் உயர்ந்துள்ளது.

ஐபோன் 16, ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17இ ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் மாடலான ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனின் விலையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சொல்லப் போனால், பட்ஜெட் பிரியர்களுக்கு ஐபோன் மீண்டும் மீண்டும் கனவாகவே சென்று கொண்டு இருக்கிறது.

புதுசு வந்தது.. பழசு ரூ.65,000 விலை உயர்வு.. iPhone 16, 17 மாடல்கள்!

ஐபோன் 16 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி வேரியண்ட்டின் பழைய விலை ரூ.69,900 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.20,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.89,990ஆக உயர்ந்துள்ளது. ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் 256 ஜிபி வேரியண்ட்டின் பழைய விலை ரூ.82,900 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.17,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.99,900 ஆக உயர்ந்துள்ளது.

ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் 512 ஜிபி வேரியண்ட்டின் பழைய விலை ரூ.1,02,900 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.22,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.1,24,900 ஆக உயர்ந்துள்ளது. ஐபோன் 17இ ஸ்மார்ட்போனின் 256 ஜிபி வேரியண்ட்டின் பழைய விலை ரூ.64,900 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.15,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.79,900 ஆக உயர்ந்துள்ளது.

ஐபோன் 17இ ஸ்மார்ட்போனின் 512 ஜிபி வேரியண்ட்டின் பழைய விலை ரூ.84,900 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.20,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.1,04,900 ஆக உயர்ந்துள்ளது. ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனின் 256 ஜிபி வேரியண்ட்டின் பழைய விலை ரூ.1,02,900 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.47,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.1,49,900 ஆக உயர்ந்துள்ளது.

ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனின் 512 ஜிபி வேரியண்ட்டின் பழைய விலை ரூ.1,39,900 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.35,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.1,74,900 ஆக உயர்ந்துள்ளது. ஐபோன் ஏர் ஸ்மார்ட்போனின் 1TB வேரியண்ட்டின் பழைய விலை ரூ.1,59,900 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.65,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.2,24,900 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது, அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் டியோ, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் இந்திய விலைகளை தெரிந்து கொள்ளலாம். ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,64,900ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,89,900 ஆகவும் இருக்கிறது.

மேலும், 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,39,900 ஆகவும், 2 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை விலை ரூ.3,14,900 ஆகவும் இருக்கிறது. ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,79,900ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,04,900 ஆகவும் இருக்கிறது.

1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,54,900 ஆகவும், 2 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை விலை ரூ.3,29,900 ஆகவும் இருக்கிறது. ஐபோன் டியோ ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.2,99,900 ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.3,24,900 ஆகவும் இருக்கிறது.

மேலும், 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.3,74,900 ஆகவும், 2 டிபி மெமரி வேரியண்டடின் விலை ரூ.4,49,900 ஆகவும் இருக்கிறது. இதுவரையில் வெளியான ஐபோன் மாடல்களிலேயே அதிக விலை கொண்ட மாடலாக ஐபோன் டியோ இருக்கிறது. இந்த விலை பெரிதாக தெரியக்கூடாது என்பதற்காக பழைய மாடல்கள் ரூ.65,000 வரைய விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 16 iPhone 17 iPhone 17e iPhone Air Get Price Hike in India Check Old And New Prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X