OFFER விலையில் iPhone 16 சீரீஸ்.. Pre-order ஆரம்பம்.. பேங்க் டிஸ்கவுன்ட், EMI, எக்ஸ்சேன்ஜ் வேல்யூ விவரங்கள்!
iPhone 16 Series Pre-order: இந்த வார தொடக்கத்தில் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் முன்பதிவு இந்தியாவில் இன்று மாடல் முதல் தொடங்கியது. எதிர்பார்த்தபடியே இந்த சீரிஸின் கீழ் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 மாடல்கள் வெளியாகின. இந்த 4 மாடல்களின் விலை நிர்ணயம் என்ன? முன்பதிவு செய்வது எப்படி? அபின் 16 சீரீஸை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸின் ப்ரீ-ஆர்டர் இன்று மாலை (செப்.13 ஆம் தேதி மாலை) 5.30 மணிக்கு தொடங்கியது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் ப்ரீ-ஆர்டர் செய்யலாம். இதுதவிர்த்து ஐபோன் 16 சீரீஸ் ஆனது டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிஸிக்கல் ஆப்பிள் ஸ்டோர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்களிடமிருந்தும் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும்.

ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தின்படி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஐபோன் 16 சீரீஸின் மீது ரூ.5,000 கேஷ்பேக்கை பெறுவார்கள். மேலும் பெரும்பாலான முன்னணி வங்கிகளில் இருந்து 3 - 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை எக்ஸ்சேன்ஜ் ஆபரின்கீழ் வாங்க விரும்பினால், பழைய ஐபோனுக்கான டிரேட்-இன் விருப்பங்களையும் ஆப்பிள் கொண்டுள்ளது. இதன்கீழ் உங்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.67,500 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஐபோன் 16 மாடலை வாங்குபவர்களுக்கு 3 மாதங்களுக்கான ஆப்பிள் ம்யூசிக். ஆப்பிள் டிவி பிளஸ் ற்றும் ஆப்பிள் ஆர்கேட் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
முன்பதிவுகளை தொடர்ந்து ஐபோன் 16 சீரீஸ் ஆனது, இந்தியாவில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இது குரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற முன்னணி எலக்ட்ரானிக் கடைகள் உட்பட, மேலே குறிப்பிட்டுள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களின் வழியாகவும் நேரடியாக வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இந்தியாவில் ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.99,900 மற்றும் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டுமே பிளாக், பிங்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கும்.
ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை நிர்ணயம் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,29,900, ரூ.1,49,900 மற்றும் ரூ.1,69,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக உள்ள ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,44,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 512ஜிபி மற்றும் 1டிபிஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,64,900 மற்றும் ரூ.1,84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே பிளாக் டைட்டானியம், டெஸெர்ட் டைட்டானியம்,நேச்சுரல் டைட்டானியம் மற்றும் ஒயிட் டைட்டானியம் கலர்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








