Home
Mobile

iPhone 16 முதல் iPhone 16 Pro Max வரை.. இந்தியாவில் என்ன விலை? எப்போது முதல் விற்பனை? என்னென்ன ஆபர்?

iPhone 16 Price in India: ஒருவழியாக ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை இனிதே அறிமுகம் செய்தது. "இனிதே" என்று குறிப்பிடும் அளவிற்கு ஆப்பிள் அப்படி என்ன செய்துவிட்டது என்று உங்களில் சிலர் கேட்கலாம். விஷயம் இருக்கிறது! அது என்னவென்றால் புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களின் இந்திய விலை நிர்ணயங்கள் ஆனது எதிர்பார்த்தபடியே துளியும் அதிகரிக்கவில்லை. ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அப்படி என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? என்னென்ன கலர்களில் வாங்க கிடைக்கும்? எப்போது முதல் விற்பனை? என்னென்ன சலுகைகள்? இதோ விவரங்கள்:

எதிர்பார்த்தபடியே ஐபோன் 16 சீரீஸின் கீழ் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

iPhone 16 முதல் iPhone 16 Pro Max வரை.. இந்தியாவில் என்ன விலை?

அனைத்துமே அதன் முன்னோடிகளை விட (அதாவது பழைய ஐபோன் மாடல்களை விட) குறிப்பிட்ட சில வன்பொருள் மேம்படுத்தல்களை (Hardware Upgrades) பெற்றுள்ளன. மேலும் இந்த 4 மாடல்களுமே ஐஓஎஸ்-ன் எதிர்கால வெர்ஷனில் வெளிவரும் புதிய ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் (Apple Intelligence) அம்சங்களையும் ஆதரிக்கும்.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் - இந்திய விலை நிர்ணயம், கலர் ஆப்ஷன்கள், விற்பனை தேதி: இந்தியாவில் ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.99,900 மற்றும் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டுமே பிளாக், பிங்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கும். இரண்டுமே செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும். அதன் பின்னர் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும்.

ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - இந்திய விலை நிர்ணயம், கலர் ஆப்ஷன்கள், விற்பனை தேதி: இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,29,900, ரூ.1,49,900 மற்றும் ரூ.1,69,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,44,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 512ஜிபி மற்றும் 1டிபிஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,64,900 மற்றும் ரூ.1,84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே பிளாக் டைட்டானியம், டெஸெர்ட் டைட்டானியம்,நேச்சுரல் டைட்டானியம் மற்றும் ஒயிட் டைட்டானியம் கலர்களில் வாங்க கிடைக்கும். இரண்டுமே செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும். அதன் பின்னர் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும்.

ஐபோன் 16 சீரீஸ் மீதான விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு 3 அல்லது 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐவிருப்பங்களும் அணுக கிடைக்கும். கடைசியாக ரூ.67,500 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
iPhone 16 iPhone 16 Plus iPhone 16 Pro iPhone 16 Pro Max Price in India Sale Date Offers Colours
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X