Home
Mobile

iPhone 17 அறிமுகத்தை தொடர்ந்து iPhone 16 மீது மெகா விலை குறைப்பு.. Flipkart VS Amazon எங்கே வாங்கினால் லாபம்?

ஆப்பிளின் 2025 ஐபோன் மாடல்கள், அதாவது புதிய ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மாடல்கள் இன்று (செப்.9) இரவு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16 (iPhone 16) மாடலானது ஏற்கனவே நல்ல ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 16 மாடல் ஆனது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்கள்எ ஆன அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலுமே, நேரடி விலைகுறைப்பை பெற்று நல்ல ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இருப்பினும் அமேசான் இந்தியா தான் பிளிப்கார்ட்டை விட அதிக விலை குறைப்பின் கீழ் ஐபோன் 16 மாடலை விற்கிறது.

iPhone 17 அறிமுகத்தை தொடர்ந்து iPhone 16 மீது மெகா விலை குறைப்பு!

ஐபோன் 16 மீதான அமேசான் ஆபர்: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது அமேசானில் ரூ.69,999 க்கு கிடைக்கிறது. இது ஐபோன் 16 மாடலின் அசல் விலையான ரூ.79,900-ஐ விட ரூ.9,901 விலை குறைவாகும்.

கிட்டத்தட்ட ரூ.10,000 என்கிற நேரடி விலைகுறைப்பு மட்டுமின்றி, ஐபோன் 16 மாடல் மீது கிரெடிட் கார்டு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் அணுக கிடைக்கிறது. அவைகளை சரியாக பயன்படுத்தினால் ஐபோன் 16 மாடலின் இறுதி ஆபர் விலையை சுமார் ரூ. 60,000 வரை கொண்டு வர முடியும்.

ஐபோன் 16 மீதான பிளிப்கார்ட் ஆபர்: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.74,900 க்கு கிடைக்கிறது. இது ஐபோன் 16 மாடலின் அசல் விலையான ரூ.79,900-ஐ விட ரூ.5000 விலை குறைவாகும்.

மேலும் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது சில பேங்க் கூட்டாண்மைகள் மூலம் ஐபோன் 16 மாடல் மீது கூடுதல் சேவிங்ஸையும் வழங்குகிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் (Flipkart Axis Bank) மற்றும் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுகளில் 5 சதவீத கேஷ்பேக் (ரூ.4,000 வரை) கிடைக்கும்.

இதேபோல ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) டெபிட் கார்டு மூலம் ரூ.750 வரை கேஷ்பேக் கிடைக்கும். எச்டிஎச்பி (HDFC) வங்கி வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பரிவர்த்தனைகளில் 8 முதல் 10 சதவீதம் கேஷ்பேக்கை பெறலாம்; இதன்கீழ் அதிகபட்சமாக ரூ. 1,600 வரை ஆபர் கிடைக்கும்.

ஐபோன் 16 மாடலை தவிர்த்து ஐபோன் 17 அறிமுகத்திற்கு பிறகு எந்தெந்த ஐபோன் மாடல்களின் விலைகள் குறைக்கப்படலாம்? ஐபோன் 17 அறிமுகத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் அதன் "முந்தைய தலைமுறை" (பழைய) ஐபோன் மாடல்களின் விலைகளை குறைக்க வாய்ப்புள்ளது. இன்று (செப்டம்பர் 9) நடக்கும் வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு ஆப்பிள் அதன் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவற்றை விற்பனை செய்வதை நிறுத்த வாய்ப்புள்ளது.

ஆக பழைய ஐபோன்கள் மீது ஆபர் எதிர்பார்ப்பவர்களுக்கு ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் மட்டுமே மிஞ்சி இருக்கும். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 மாடலின் விலையை அதிகாரப்பூர்வமாக ரூ.10,000 குறைத்திருந்தது. 2023 இல் ஐபோன் 14 மீதும் இதேபோன்ற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது.

ஆக 2025 ஆம் ஆண்டிலும் கூட நாம் இதேபோன்ற விலைக்குறைப்பை எதிர்பார்க்கலாம். மேலும், நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கி வருவதால், குறிப்பிட்ட பண்டிகைகளுக்கான சிறப்பு விற்பனையில் பழைய ஐபோன் மாடல்களின் மீது பெரிய அளவிலான தள்ளுபடிகள் மற்றும் விலைக்குறைப்புகள் கிடைக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். ஆக இன்னும் 1-2 மாதங்களில் ஐபோன் 16 மாடல் ஆனது இன்னும் மலிவாக கிடைக்கக்கூடும்.

Best Mobiles in India

English summary
iPhone 16 Gets Price Cut in Both Flipkart and Amazon India Ahead iPhone 17 Launch Today 10 30 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X