என்னது இந்த கலர் iPhone 16 வரிசையிலேயே இல்லையா? புயலை கிளப்பிய தகவல்.. ஆப்பிள் ரசிகர்களுக்கு டிவிஸ்ட்..
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த புதிய வரவான ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) போன்களை பற்றி தான் இணையம் முழுக்க பேச்சாக இருக்கிறது. அறிமுகமே இன்னும் செய்யப்படவில்லை என்றாலும், அடேங்கப்பா! என்று கூறும் அளவிற்கு, இப்போதே இந்த போன்களின் மீதான எதிர்பார்ப்பும் ஹைப்பும் உலகளவில் அதிகமாகியுள்ளது. ஐபோன் 16 தொடர் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், இன்டர்நெட் முழுக்க ஐபோன் 16 பற்றிய தகவல்களாக நிரம்பியுள்ளது. இதில் ஒரு சுவாரசியமான தகவலும் இப்போது வெளியாகி, ஆப்பிள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன் சாதனங்களை வரும் செப்டம்பர் 9, 2024 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த தொடரில் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய நான்கு மாடல்களை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோன் 16 தொடரில் 5 உறுதியான நிறங்கள்.. ஆனால் ஒரு கிளாசிக் நிறம் இல்லையா?
இந்த போன்கள் பற்றிய பல விவரங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், புதிய தொடரில் புதுப்பிக்கப்பட்ட கேமரா மாட்யூல், பெரிய டிஸ்ப்ளே மற்றும் புதிய சிப்செட் ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே தொடர்ச்சியாக வெளியான தகவல்களின் மூலம் இந்த மாற்றங்கள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், தற்போது ஐபோன் 16 தொடரில் என்ன நிறங்கள் இருக்குமென்ற தகவல் லீக் ஆகியுள்ளது.
சமூக ஊடகங்களில் ஐபோன் 16 தொடரை காட்டும் ஒரு டெமோ வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ ஐபோன் 16 வரிசியில் கிடைக்கும் வண்ண விருப்பங்களை வெளிப்படுத்துகிறது. ஐபோன் 16 பிளாக், ப்ளூ, க்ரீன், பிங்க் மற்றும் வெள்ளை என ஐந்து வண்ண விருப்பங்கள் இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த தொடரில் மஞ்சள் நிற விருப்பம் இல்லை என்பதை இந்த தகவல் தெரிவிக்கிறது.
முந்தைய ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் வரிசையில் பிளாக், ப்ளூ, க்ரீன், பிங்க் மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஐபோன் 16 தொடரில் கிளாசிக் மஞ்சள் நிற விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு நடுவே, மற்றொரு வீடியோவில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) டெமோவில், இந்த சாதனம் டெசர்ட் டைட்டானியம் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max):
அதேபோல், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டெமோவின் ஒட்டுமொத்த வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல், ப்ரோ மாடலைப் போன்ற மென்மையான மேற்பரப்பு மற்றும் குரோம் பூச்சுடன் வருகிறது. இது 6.9" இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இது மெல்லிய பெசலை கொண்ட எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேயை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் A18 பயோனிக் சிப்செட்டை கொண்டிருக்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் என்ற செயற்கை நுண்ணறி சேவையை ஆதரிகாலம் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) இன்பில்ட்டாக வரும் முதல் ஆப்பிள் ஸ்மார்ட்போன் வரிசையாக ஐபோன் 16 சீரிஸ் தொடர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








