புதுசு வந்தது.. பழசுக்கு ரூ.10,000 விலை குறைப்பு.. கம்மி காசுல iPhone 16, 16 Plus மாடல்.. முழு விவரம் இதோ!
இந்திய மார்கெட்டில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ஏர் மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் வெளியாகிவிட்டன. இதனால், முந்தைய ஐபோன் மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது, ஐபோன் 16 (iPhone 16) மற்றும் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடல்கள் கம்மி விலைக்கு கிடைக்கின்றன.
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் தளங்களின் டிஸ்கவுண்ட்களுக்கு ஏற்ப ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ.10,000 நேரடி விலை குறைப்பில் ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. இந்த மாடல்களின் மார்கெட் விலை, டிஸ்கவுண்ட் விலை விவரங்களை பார்க்கலாம். அதேபோல ஐபோன் 17 மற்றும் 17 ப்ரோ மாடல்களின் விலையை பார்க்கலாம்.

ஐபோன் 16 விலை
128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.79,900ஆக இருக்கிறது. இப்போது, ரூ.10,000 விலை குறைப்பு போக ரூ.69,900 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ஆஃபர் போக ரூ.69,499 விலைக்கு கிடைக்கிறது. ஒயிட், பிங்க், பிளாக், டீல் மற்றும் அல்ட்ரா மரைன் ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.
ஐபோன் 16 பிளஸ் விலை
இந்த ப்ரோ பிளஸ் மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.89,900ஆக இருக்கிறது. இப்போது, ரூ.10,000 விலை குறைப்பு போக ரூ,79,900 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. அதேபோல 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.99,900ஆக இருக்கிறது. இதற்கும் விலை குறைப்பு கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் ரூ.90,900 விலைக்கு வாங்கலாம்.
ஐபோன் 16, 16 பிளஸ் அம்சங்கள்
ப்ரோ 16 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே கிடைக்கிறது. பிளஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே வருகிறது. 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் எச்டிஆர் மற்றும் செராமிக் ஷீல்டு புரொடெக்சன் கிடைக்கிறது. சிக்ஸ் கோட் ஏ18 (Six Core A18) மற்றும் ஐஎஎஸ் 18 (iOS 18) கொடுக்கப்படுகிறது.
48 எம்பி 2ஆவது ஜெனரேஷன் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. போகஸ் பிக்சல், போட்டானிக் என்ஜின், ட்ரூடோன் ஃபிளாஸ் உள்ளது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமரா கிடைக்கிறது. 2 மாடல்களிலும் IP68 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் வருகிறது.
அதோபோல ஆக்சன் பட்டனுடன் எக்ஸ்போசர், டெப்த், ஜூம் போன்ற கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. 25W சார்ஜர் மற்றும் 30W அப்டாப்டர் சப்போர்ட் கொடுக்கிறது. ஐபோன் 16 மாடலில் 22 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேப்க் கொடுக்கும்படியும், ஐபோன் 16 பிளஸ் மாடலில் 27 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும்படியும் பேட்டரி உள்ளது.
ஐபோன் 17 விலை
இந்த ஐபோன் 17 (iPhone 17) மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.82,900 ஆக இருக்கிறது. இதில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கிடையாது. ஆகவே, அடுத்ததாக 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இருக்கிறது. இதன் விலை ரூ.1,02,900 ஆக இருக்கிறது. ப்ரீ-ஆர்டர் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்குகிறது.
ஐபோன் 17 ப்ரோ விலை
256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,34,900ஆக இருக்கிறது. 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.154900ஆகவும், 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,74,900ஆகவும் இருக்கிறது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








