விஸ்வரூப விற்பனை.. ரூ.20,901 விலை கட்.. iPhone 15-க்கு அடிச்ச ஆஃபர்.. XDR டிஸ்பிளே.. 48MP கேமரா!
ஐபோன் வாங்குவதற்கு நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கனும், அப்போதுதான் லாபத்துடன் ஆர்டர் போடலாம், இப்படி பல மாதங்களாக காத்திருந்த கஸ்டமர்களுக்கு பட்டையை கிளப்பும் நேரம் வந்துவிட்டது. அந்த கிரெடிட் கார்டு வேண்டும், இந்த டெபிட் கார்டு வேண்டும் என்று எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் நேரடியாக ரூ.20,901 விலை குறைப்பில் ஐபோன் 15 (iPhone 15) ஆர்டருக்கு கிடைக்கிறது. எந்த ஈ-காமர்ஸ் தளத்தில் ஆர்டர் செய்ய வேண்டும்? இந்த பட்ஜெட்டில் பீச்சர்கள் எப்படி? பழைய விலை மற்றும் புதிய விலை என்ன?
ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications): செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் கொண்ட 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஐபோன் 15 கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளவில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இருப்பினும், அவுட்டோரில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் எதிர்பார்க்கலாம்.

மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர் (HDR) மற்றும் ஐபோன்களில் பிரத்யேகமாக வரும் ட்ரூ டோன் (True Tone) கிடைக்கிறது. கேமரா பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக கிடைக்கின்றன. ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மட்டுமே பேக் செய்யப்பட்டுள்ளது.
48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. வைடு ஆங்கிள் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (2ஆவது ஜெனரேஷன்) டெக்னாலஜி மற்றும் 2எக்ஸ் டெலிபோட்டோ சப்போர்ட் உள்ளது. மேலும், போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) உள்ளது.
அதேபோல எச்டிஆர் (HDR) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. ரியர் கேமராவில் பிக்சல் போகஸ் மற்றும் செல்பீ ஷூட்டரில் ஆட்டோபோகஸ் மற்றும் பிக்சல் போகஸ் கிடைக்கிறது. இந்த ஐபோன் 15 போனில் ஏ16 பயோனிக் 4என்எம் (A16 Bionic 4nm) சிப்செட் உள்ளது. ஐஓஎஸ் 17 (iOS 17) மற்றும் நியூரல் என்ஜின் கிடைக்கிறது.
15W மேக்சேப் (MagSafe) வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) மற்றும் யுஎஸ்பி-சி (USB-C) ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. மூன்று மெமரி வேரியண்ட்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் உள்ளது.
மேலும், 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் இருக்கிறது. இந்த ஐபோன் 15 ஸ்லிம் பாடி கொண்டுள்ளது. ஆகவே, 7.80 மிமீ தடிமன் மற்றும் 171 கிராம் எடை வருகிறது. 5ஜி (5G), எல்டிஇ (LTE) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. பிங்க், எல்லோ, கிரீன், ப்ளூ மற்றும் பிளாக் கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது விலை விவரங்களை பார்ப்போம்.
இந்த பிரீமியம் போனின் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.79,900 பட்ஜெட்டில் இருந்தது. ஆனால், இப்போது ரூ.20,901 விலை குறைப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வேண்டியது கிடையாது. நேரடியாக விலையில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications