டிரெண்டே மாறப்போகுது! ஒரேவொரு அப்கிரேடில் ஆட்டிப்படைக்கும் ஆப்பிள்! இனி ஐபோன் 15 சீரிஸ் சகாப்தம்!
டைனமிக் ஐலேண்ட், 48 எம்பி கேமரா மற்றும் டைப் சி போர்ட் அப்கிரேடு என்று ஏற்கனவே எதிர்பார்ப்பை எகிற வைத்த ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) மாடல்கள், இப்போது, மேலுமொரு பிரம்மாண்ட அப்கிரேடுடன் வரவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro), ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) போன்கள் புதிய ட்ரெண்டை செட் செய்ய காத்திருக்கின்றன.

இந்த போன்களில் முக்கியமாக மூன்று அப்கிரேடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த அப்கிரேடுகள், இதுவரையில் வெளியான ஐபோன்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது. அந்த வகையில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் (Dynamic Island Feature), 48 எம்பி கேமரா அப்கிரேட், டைப் சி போர்ட் அப்கிரேடு என்று வாரி வழங்கப்பட்டுள்ளது.
இப்போது, புதிய கலர் அப்கிரேடுக்கும் தயாராகிவிட்டது. இந்த கலர்களுடன் கூடிய ஐபோன்களின் போட்டோக்கள் கசிந்து, ஐபோன் யூசர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது. இந்த புதிய கலர் வெர்ஷன், ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் மட்டும் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. இதற்கு முன் ஐபோன் 15 சீரிஸ் போன்களில் என்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆப்பிள் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கொடுக்கப்பட்ட பயோனிக் A16 (Bionic A16) சிப்செட் ஆப்பிள் 15 மற்றும் 15 பிளஸ் மாடல்களில் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஆப்பிள் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பயோனிக் A16 (Bionic A17) வருகிறது. இதுவரையில் வெளியான எந்த போன்களிலும் பயோனிக் A16 சிப்செட் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் 15 சீரிஸ் மாடல்களின் கேமராவை பொறுத்தவரையில் 48 எம்பியாக இருக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது. குறிப்பாக, ஆப்பிள் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் 5-6x ஆப்டிகல் ஜூம் வசதி கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி பெரும்பாலான அம்சங்கள் ஆப்பிள் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கொடுக்கப்பட்டவையே இருக்கின்றன.
ஆனால், இதுவரையில் வெளியான ஆப்பிள் போன்களில் பயன்படுத்தப்படாத கலர்களில், ஆப்பிள் 15 சீரிஸ் மாடல்கள் வர உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த எக்ஸ்க்ளூசிவ் கலர்கள் ஆப்பிள் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் கொண்டுவரப்பட உள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகின்றன.
அதில், ஆப்பிள் போன் கிரிம்சன் (Crimson) கலரில் பார்ப்பதற்கே பட்டையை கிளப்புகிறது. டார்க் ரெட் கலரில் மிகவும் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த கலரை பார்த்தாலே வாங்க தோன்றும் அளவுக்கு இருக்கிறது. இது புதிய டிரெண்ட் செட் கலராக இருக்க வாய்ப்புள்ளதாக ஆப்பிள் பிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சீரிஸ் போன்களின் ஆரம்ப விலையே ரூ.80 ஆயிரத்தை எட்ட வாய்ப்புள்ளது.
மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








