அசூர டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.8000 கட்.. பிச்சிக்குது iPhone 15 விற்பனை.. எதுல ஆர்டர்?
ஆப்பிள் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக ஐபோன் 15 (iPhone 15) போனுக்கு முழுதாக ரூ.8000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடி எந்த தளத்தில் கிடைக்கிறது? எப்படி பெறுவது? அந்த போனின் முழு அம்சங்கள் என்ன? உள்ளிட்ட விவரம் இதோ.
ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications): இந்த போனில் 6.1 இன்ச் (2556×1179 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எக்டிஆர் (Super Retina XDR) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் மேக்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் (HDR), ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் வருகிறது. அதோடு செராமிக் சீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் ஐஓஎஸ் 17 (iOS 17) கொண்ட சிக்ஸ்-கோர் ஏ16 பயோனிக் 4என்எம் (Six-Core A16 Bionic 4nm) சிப் செட் வருகிறது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஈசிம் (eSIM) சிலாட்டுடன் டூயல் சிம் சிலாட் கொண்டிருக்கிறது. IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவானது, ஓஐஎஸ் (OIS), 2X டெலிபோட்டோ, 100% போகஸ் பிக்சல், போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash), எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் (HDR Video Recording), டால்பி விஷன் (Dolby Vision) போன்ற அம்சங்களுடன் வருகிறது.
அதோடு 4K HDR சினிமாடிக் மோட் (Cinematic Mode) அம்சமும் கொண்டிருக்கிறது. அதேபோல 12 எம்பி அல்ட்ரா வைடு செகண்டரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 12 எம்பி ட்ரூ டெப்த் செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் போகஸ் பிக்சலுடன் (Focus Pixels) ஆட்டோபோகஸ் (Autofocus), ரெடினா ஃஸ்பிளாஷ் (Retina Flash) சப்போர்ட் உள்ளது.

அதேபோல எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங், டால்பி விஷான், 4K சப்போர்ட், 1080p ஸ்லோவ்-மேஷன் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பேஸ்ஐடி (FaceID) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த ஐபோனில் 15W மேக்சேப் (MagSafe) வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது.
இதற்கு யுஎஸ்பி-சி (USB-C) ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. 171 கிராம் எடை கொண்டிருக்கிறது. இதன் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி, வை-பை 6, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை கொண்டிருக்கிறது. பிங்க் (Pink), யெல்லோ (Yellow), கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
இந்த ஐபோன் 15 போனின் 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.79,900ஆகவும், 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.89,900ஆகவும், 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,09,900ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையிலும் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த விற்பனையானது, குரோமா (Croma) தளத்தில் வழங்கப்படும் டிஸ்கவுண்ட் காரணமாக இரட்டிப்பாகி இருக்கிறது.

இந்த போனின் 128 ஜிபி வேரியண்ட்டுக்கு ரூ.3000 பிளாட் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதோடு ரூ.5,000 மதிப்பில் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.8000 டிஸ்கவுண்ட் போக 71,900க்கு ஐபோன் 15 போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








