மிரளவிடும் iPhone 15 ப்ரோ.. மேட் கிளாஸ் பேனல்.. செராமிக் சீல்ட்.. 48எம்பி கேமரா.. என்ன விலை?
மேட் கிளாஸ் பேக் பேனல், டைட்டானியம் டிசைன், 48எம்பி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, ஏ17 ப்ரோ சிப்செட் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள், விலை மற்றும் விற்பனை தேதி விவரங்கள் இதோ.
ஐபோன் 15 ப்ரோ அம்சங்கள் (iPhone 15 Pro Specification): இந்த ப்ரோ மாடல் டைட்டானியம் (Titanium) டிசைனில் செராமிக் சீல்ட் (Ceramic Shield) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு மேட் கிளாஸ் பேக் (Matt Glass Back) பேனல் வருகிறது.

பிளாக் டைட்டானியம் (Black Titanium), வைட் டைட்டானியம் (White Titanium), ப்ளூ டைட்டானியம் (Blue Titanium) மற்றும் நேச்சுரல் டைட்டானியம் (Natural Titanium) ஆகிய நான்கு கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஆகிய வேரியண்ட்கள் வருகின்றன.
இந்த ப்ரோ மாடல் போனில் 6.1 இன்ச் (2556x1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் ப்ரோமோஷன் (ProMotion) டெக்னாலஜி உடன் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
அதோடு டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island), ட்ரூ டோன் (True Tone), வைடு கலர் பி3 (Wide colour P3) மற்றும் ஹாப்டிக் டச் (Haptic Touch) உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. அவுட்டோரில் 2,000 பீக் பிரைட்னஸ் வருகிறது. IP68 தர ஸ்ப்ளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபோன் 15 ப்ரோ போனில் ஐஓஎஸ் 17 (iOS 17) கொண்ட ஏ17 ப்ரோ (A17 Pro) சிப்செட் வருகிறது. நியூ 6-கோர் (New 6‑core) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் டிரிபிள் ரியர் ப்ரோ கேமரா சிஸ்டம் (Triple Rear Pro Camera System) கொண்டுள்ளது. ஆகவே, 48 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங், 2X ஆப்டிகல் ஜூம் அவுட் மற்றும் 6X ஆப்டிகல் ஜூம் ரேஞ்ச் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 15x டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல 12 எம்பி ட்ரூ டெப்த் (TrueDepth) செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ரெடினா பிளாஷ் (Retina Flash), போட்டோனிக் எஞ்சின் (Photonic Engine), டீப் பியூஷன் (Deep Fusion) போன்ற பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பேஸ் ஐடி அன்லாக் (Face ID Unlock) சப்போர்ட் உள்ளது. எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் (Emergency SOS) கிராஷ் டிடெக்ஷன் (Crash Detection) பாதுகாப்பு அம்சங்கள் வருகின்றன. டூயல் பிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual-Frequency GPS), டிஜிட்டல் காம்பஸ் (Digital Compass), வை-பை (Wi-Fi), செல்லூலார் (Cellular) மற்றும் ஐபீகன் மைக்ரோ-லோகேஷன் (iBeacon Micro Location) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன.
டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஆடியோ பிளேபேக் வருகிறது. சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது. டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியில் 15W மேக்சேப் (MagSafe) வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 7.5W கியூஐ (Qi) வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.
அதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளதால், 30 நிமிடங்கள் 50 சதவீதம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இந்த போனின் ஆரம்ப விலை ரூ.1,34,900 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் 900 டாலர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ப்ரீ-ஆர்டர் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications