விஸ்வரூப விற்பனை.. ரூ.25,000 விலை குறைப்பு.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஆப்பிள் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும் படியான டிஸ்கவுண்ட்டில் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. நம்ப முடியாதபடி ரூ.25,000 விலை குறைப்பில் இப்போது, ஆர்டருக்கு கிடைக்கிறது. இதற்கு எந்தவித பேங்க் கார்டுகளும், கூப்பன்களும் தேவை கிடையாது. ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) மாடல்களின் விற்பனை தொடங்கி இருப்பதால், இந்த மாடலுக்கு சலுகை வாரி வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு எங்கு வாங்கலாம்? இதன் பீச்சர்கள் எப்படி?
ஐபோன் 15 ப்ரோ பிளிப்கராட் ஆஃபர் (iPhone 15 Pro Flipkart Offer): இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் விற்பனை தொடங்கி இருக்கிறது. இதனால், பழைய மாடல்களுக்கு கணக்கே இல்லாமல், விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் அல்ட்ரா பிரீமியம் மாடலான ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.25,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்புடன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஐபோன் 15 ப்ரோ மாடலானது, ரூ. 1,34,900 பட்ஜெட்டில் அறிமுகமானது, இப்போது, ரூ. 1,09,900 விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு கஸ்டமர்கள் எந்தவொரு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டியது கிடையாது.
ஐபோன் 15 ப்ரோ அம்சங்கள் (iPhone 15 Pro Specifications): இந்த ப்ரோ மாடலில் டிஸ்பிளே, கேமரா, டிசைன் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கின்றன. 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடலாகும். 120Hz ரெஃப்ரெட் ரேட், 1600 பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆப்பிள் போன்களில் வரும் செராமிக் ஷீல்டு புரொடெக்சன் (Ceramic Shield Protection) வருகிறது. மேலும், வழக்கமான எச்டிஆர் (HDR), ட்ரூ டோன் (True Tone), டைனாமிக் ஐலேண்ட் மற்றும் ப்ரோமோஷன் டெக்னாலஜி (ProMotion Technology) வருகிறது. இந்த ஐபோன் 15 ப்ரோ போனில் ஐஓஎஸ் 17 (iOS 17) மற்றும் சிக்ஸ்-கோர் ஏ17 ப்ரோ 3என்எம் (Six-Core A17 Pro 3nm) சிப் வருகிறது.

128 ஜிபி மெமரி, 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது. இந்த மாடலிலும் ஆக்சன் பட்டன் இடம் பெற்றுள்ளது. இந்த போனில் இல்லாத கேமரா பீச்சர்களே கிடையாது என்றே சொல்ல வேண்டும். 48 எம்பி வைடு-ஆங்கிள் மெயின் கேமரா வருகிறது.
இந்த கேமராவில் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வருகிறது. மேலும், போட்டோனிக் என்ஜின், ட்ரூ டேன் ஃபிளாஷ் மற்றும் டால்பி விஷன் போன்ற பீச்சர்கள் வருகின்றன. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. அதேபோல 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங், 15X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் உள்ளது.
இந்த ஐபோன் 15 ப்ரோவில் 12 எம்பி ஆட்டோபோகஸ் செல்பீ ஷூட்டர் வருகிறது. போகஸ் பிக்சல், ரெடினா ஃபிளாஷ், எச்டிஆர் மற்றும் டால்பி விஷன் போன்ற பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது. 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) கொண்ட லித்தியம் ஐயான் பேட்டரி (Lithium-ion Battery) வருகிறது.


Click it and Unblock the Notifications