Home
Mobile

Apple-ன் விலை உயர்ந்த மாடலாக iPhone 15 Pro Max அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

சொன்னபடியே ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் 2023 ஐபோன் மாடல்கள், அதாவது ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) மாடல்கள் ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டன. ஐபோன் 15 சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அவைகளில் "வழக்கம் போல" ஐபோன் 15 சீரிஸின் மிகவும் விலை உயர்ந்த மாடலாக ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) அறிமுகமாகி உள்ளது. ஆப்பிளின் இந்த ஹை-எண்ட் மாடலின் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ முழு விவரங்கள்:

iPhone 15 Pro Max அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது கிரேட் 5 டைட்டானியம் சேஸ் - அதாவது நாசாவின் மார்ஸ் ரோவரில் பயன்படுத்தப்பட்ட அதே மெட்டீரியல் - உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.7 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஆப்பிளின் கூற்றுப்படி, இதில் ஸ்டெயின்லெஸ் எஃக் பயன்படுத்தப்படாததால் இது மிகவும் இலகுவானதாக இருக்கும். கூடவே இது மிகவும் மெல்லிய பெஸல்களையும் கொண்டுள்ளது. மேலும், ஆப்பிளின் புதிய ஆக்ஷன் பட்டனுக்கு ஆதரவாக அதன் ஐகானிக் மியூட் ஸ்விட்ச் அகற்றப்பட்டுள்ளது. இதிலுள்ள ஆக்ஷன் பட்டன் கஸ்டமைஸ் செய்யப்பட கூடியதாக இருக்கும்.

மேலும் இந்த மாடல் புதிய ஏ17 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஆப்பிளின் கூற்றுப்படி, இது ஒரு வினாடிக்கு 35 டிரில்லியன் செயல்பாடுகளுக்கான ஆதரவுடன் புதிய கட்டமைப்பை கொண்டுள்ளது. மேலும் இது ரே டிரேசிங்கிற்கான ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட ஜிபியு செயல்திறனையும் கொண்டுள்ளது.

மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டபடியே இந்த மாடல் இ10 ஜிகாபிட் டிரான்ஸ்பர் ஸ்பீடை வழங்கும் யூஎஸ்பி-3 சப்போர்ட் உடன் வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் இதுவொரு மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மாற்றமாகும்; மேம்பாடு ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை, புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது 24 மிமீ 35 மிமீ மற்றும் 38 மிமீ லென்ஸ் மோட்களுக்கான ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட 48 மெகாபிக்சல் மெயின் கேமராவை பேக் செய்கிறது. மேலும் இது 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 120 மிமீ ஃபோக்கல் லென்த் பெரிஸ்கோப் சென்சார் உடனான 12-மெகாபிக்சல் 5x டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை $1,199 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.99,320 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது "நிச்சயமாக" இதே விலைக்கு இந்தியாவில் வாங்க கிடைக்காது.

இந்தியாவில் இது ரூ.1,59,900 முதல் வாங்க கிடைக்கும். இது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை நிர்ணயமாகும். மேலும் ப்ரோ மேக்ஸ் மாடலானது 512ஜிபி மற்றும் 1டிபி போன்ற ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழும் வாங்க கிடைக்கும்.

விற்பனையை பொறுத்தவரை, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் ப்ரீஆர்டர் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் என்றும், அதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி இது விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது பிளாக் டைட்டானியம், ப்ளூ டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 15 Pro Max Launched in Apple Event 2023 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X