1 வருஷம் தான் பழசு.. இந்த iPhone மாடல் மீது ரூ.30,410 பிளாட் டிஸ்கவுண்ட்.. வெளுத்து கட்டும் Vijay Sales ஆபர்!
ஆப்பிள் ஐபோன்கள் (Apple iPhones) மீது மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்குவதற்கு பெயர் போன இந்தியன் ரீடெயில் செயின் ஆன விஜய் சேல்ஸ் (Vijay Sales), அதன் பண்டிகை கால சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் மாடல் ஒன்றின் மீது மிகப்பெரிய அளவிலான நேரடி தள்ளுபடியை (Flat Discount) அறிவித்துள்ளது. அது ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலாகும். தற்போது இது விஜய் சேல்ஸ்-ல் இந்தியாவிலேயே மிகவும் குறைவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.
விஜய் சேல்ஸ் வலைத்தளத்தில் ஐபோன் 15 ப்ரோ மாடல் மீது ரூ.30,410 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ மாடலானது ரூ.1,04,490 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் வெளியீட்டு விலை ரூ.1,34,900 ஆகும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த பிளாட் டிஸ்கவுண்ட் ஆனது ஐபோன் 15 ப்ரோ மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்; மற்றும் ஒயிட் மற்றும் பிளாக் கலர் வேரியண்ட்களின் மீது மட்டுமே கிடைக்கிறது.

விஜய் சேல்ஸ் வழங்கும் இந்த பிளாட் தள்ளுபடி ஆனது எந்த விதமான மறைக்கப்பட்ட விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் இல்லாமல் வருகிறது. சற்றே மலிவான விலைக்கு ஹைஎண்ட் ஐபோன் மாடலை வாங்க விரும்பும் எவருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும். ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்த பின்னர், அதன் பழைய ஐபோன்களின் விலைகளை குறைத்து இருந்தாலும்கூட, ஐபோன் 15 ப்ரோ மீது கிடைக்கும் இந்த தள்ளுபடி ஒப்பிட முடியாததாக உள்ளது.
ரூ.30,410 என்கிற பிளாட் தள்ளுபடியுடன் சேர்த்து, ஐபோன் 15 ப்ரோ மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் கூட அணுக கிடைக்கும். இதன் கீழ் ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலையை இன்னும் குறைக்க முடியும். புதிய ஐபோன் 16 ப்ரோவுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 15 ப்ரோ இன்னும் ஒரு நல்ல, உறுதியான சாய்ஸ் ஆகவே உள்ளது.
இரண்டு மாடல்களுக்கும் இடையேயான விலை வித்தியாசம் ரூ.15,410 ஆகும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோவின் இந்திய விலை நிர்ணயம் ரூ.1,19,900 முதல் தொடங்குகிறது. இது மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா-வைட் கேமரா, அதிக சக்திவாய்ந்த சிப் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ கேப்சர் போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளதே இந்த விலை வித்தியாசத்திற்கு முக்கிய காரணமாகும்.
ஒருவேளை நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடிகளை தேடினால், பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நடக்கும் பிக் ஷாப்பிங் உத்சவ் 2024 (Big Shopping Utsav 2024) என்கிற சிறப்பு விற்பனை அணுகலாம். அக்டோபர் 13 ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த விற்பனையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீது ஏகபோகமான நேரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையில் கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) ஆனது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்சி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G) ஆனது ரூ.95,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறத. ரியல்மி பி1 5ஜி (Relame P1 5G) ஆனது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி85 (Motorola g85) ஆனது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஆனது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G) ஆனது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,200 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G) ஆனது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது. சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) ஆனது ரூ.99,999 க்கு பதிலாக ரூ.67,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்சி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) ஆனது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.9,749 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








