பொளக்குது விற்பனை.. ரூ.19,901 விலை குறைப்பு.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. இதைவிட கம்மி இல்ல.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான விலை குறைப்பில் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) கிடைக்கிறது. இதுவரையில் கிடைக்காதபடி ரூ.19,901 பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, சென்சார்-ஷிப்ட் கேமரா, மேக்சேப் சார்ஜிங் மற்றும் போட்டோனிக் என்ஜின் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த ஐபோன் 15 பிளஸ் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளளாம்.
ஐபோன் 15 பிளஸ் அம்சங்கள் (iPhone 15 Plus Specifications): இந்த போனில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் (2796 × 1290 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ட்ரூ டோன் (True Tone), 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் வருகிறது.

மேலும், செராமிக் ஷீல்டு புரொடெக்சன் (Ceramic Shield Protection) உள்ளது. 48 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) வருகிறது. மெயின் கேமராவில் 2X டெலிபோட்டோ வருகிறது. அதேபோல சென்சார்-ஷிப்ட் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் (Sensor-shift Optical Image Stabilisation) உள்ளது.
மேலும், போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) வருகிறது. 4K வீடியோ ஷூட் மற்றும் சினிமாடிக் மோட் (Cinematic Mode) சப்போர்ட் வருகிறது. எச்டிஆர் சப்போர்ட் உள்ளது. 12 எம்பி ட்ரூ டெப்த் செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixels) செய்து கொள்ளலாம்.
அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். ஐஓஎஸ் 17 (iOS 17) வருகிறது. பயோனிக் ஏ16 4என்எம் சிக்ஸ்-கோர் (Bionic A16 4nm Six-Core) சிப்செட் உள்ளது. 128 ஜிபி மெமரி, 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஈசிம் (eSIM) மற்றும் டைப்-சி போர்ட் வருகிறது. இந்த ஐபோன் 15 பிளஸ் போனில் 5ஜி (5G), எல்டிஇ (LTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ள்டூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) போன்ற கனெக்டிவிட்டி வருகிறது.
ஐபோன் 15 பிளஸ் விலை (iPhone 15 Plus Price): இந்த போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ.89,900 ஆகவும், 256 ஜிபி மாடலின் விலை ரூ.99,900 ஆகவும், 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,19,900ஆகவும் இருக்கிறது. இப்போது, நம்ப முடியாத விலை குறைப்பில் பிளிப்கார்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. அதாவது, 128 ஜிபி மெமரி கொண்ட யெல்லோ மாடலின் விலை ரூ.69,999ஆக குறைந்துள்ளது.
ஆகவே, ரூ.19,901 விலை குறைப்பில் இந்த ஐபோன் 15 பிளஸ் போனை வாங்கி கொள்ளலாம். மற்ற மாடல்களும் ரூ.72,999 பட்ஜெட்டில் கிடைக்கின்றன. அதாவது, பிங்க் (Pink), கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர் மாடல்களுக்கு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, யெல்லோ மாடலை மட்டும் அதிக விலை குறைப்பில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications