Home
Mobile

ஆச்சரியப்பட வைக்கும் iPhone 15 விலை.. கைகொடுக்க போகும் Apple-ன் "பழைய விலை" பார்மூலா!

ஐபோன் 15 (iPhone 15) சீரீஸ் பற்றிய சமீபத்திய 'லீக்ஸ்' தகவலானது, இந்த சீரீஸின்கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன் 15, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 3 மாடல்களின் விலை, வடிவமைப்பு மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஐபோன் 15 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? முந்தைய ஐபோன்களின் லான்ச் டைம்லைனை (Launch Timeline) வைத்து பார்க்கும் போது ஐபோன் 15 சீரீஸ், வருகிற செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 சீரீஸ், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிவிக்கப்பட்டது.

ஆச்சரியப்பட வைக்கும் iPhone 15 விலை.. Apple-ன்

ஐபோன் 15 சீரீஸ் டிசைன்: இந்த சீரீஸின் கீழ் உள்ள அனைத்து மாடல்களும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிஸைனுடன் (Punch-hole display design) வரும். ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ஆப்பிளின் பாரம்பரியமான பட்டன் டிஸைன் (Button design) இடம்பெறுமென்று கூறப்படுகிறது.

மற்ற சில லீக்ஸ் தகவல்கள், உற்பத்தி தொடர்பான சிக்கல்கள் காரணமாக ஆப்பிள் நிறுவனம் அதன் பட்டன்லெஸ் டிஸைனை (Buttonless design) தவிர்க்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. இதுதவிர்த்து, பழைய மியூட் சுவிட்ச் பட்டனை (Mute switch button) புதியதாக மாற்றவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மியூட் சுவிட்ச் பட்டன் ஆனது, ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் (Apple Watch Ultra) காணப்படும் கஸ்டமைஸபிள் ஆக்ஷன் பட்டனை (Customizable Action button) போல செயல்படக்கூடும்; மேலும் இது ஐபோன் 15 சீரீஸின் ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படும். ஐபோன் 15 மாடலில் பழைய மியூட் சுவிட்ச்சே இடம்பெறும்.

ஐபோன் 15 சீரீஸ் அம்சங்கள்: ஐபோன் 15 ஆனது ஆப்பிளின் பயோனிக் ஏ16 சிப்செட்டை (Bionic A16 chipset) பேக் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம் இதே தான் ஐபோன் 14 சீரீஸின் ப்ரோ மாடல்களிலும் உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களானது புதிய பயோனிக் ஏ17 (Bionic A17) சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஐபோன் 15 ஆனது ஐபோன் 14 சீரீஸின் ப்ரோ மாடல்களில் உள்ள 48 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கலாம். தற்போதுள்ள ஸ்டாண்டர்ட் ஐபோன் மாடல்களில் காணப்படும் 12 மெகாபிக்சல் சென்சார்களுடன் ஒப்பிடும் போது இதுவொரு பெரிய மேம்படுத்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இருப்பினும் ஆப்டிகல் ஜூமிற்கான டெலிஃபோட்டோ லென்ஸ் (Telephoto lens for optical zoom) அல்லது லிடார் (LiDAR) போன்றவைகளை ஐபோன் 15-ல் எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் இது ப்ரோ மாடல்களில் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

ஐபோன் 15 சீரீஸின் விலை: ஆப்பிள் (Apple) நிறுவனமானது, பழைய விலையில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டால், ஐபோன் 15 மாடலின் இந்திய விலை நிர்ணயம் (iPhone 15 Price in India) ரூ.80,000 என்கிற வரம்பில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகையில் உள்ள ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலின் விலை ரூ.1,30,000 என்கிற வரம்பில் இருக்கும். கடைசியாக உள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடலின் விலை ரூ.1,29,900 என்கிற வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 15 Likely to Launch For Rs 80000 If Apple Decided To Introduce New iPhones At The Old Prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X