ஏ16 பயோனிக் சிப்செட்.. 48எம்பி கேமரா.. satellite கனெக்ஷன்.. அறிமுகமானது ஐபோன் 15 சீரிஸ்.. என்ன விலை?
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். அதாவது டைனமிக் ஐலேண்ட் தொழில்நுட்பத்துடன் புதிய ஐபோன் 15 சீரிஸ் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் 15 மாடல் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.
அதாவது ஆப்பிள் வொண்டர்லஸ்ட் (Wonderlust) நிகழ்வில் இந்த ஆண்டிற்கான ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் 15 மாடல் ஆனது 6.1-இன்ச் டைனமிக் ஐலேண்ட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் ஐபோன் 15 பிளஸ் மாடல் ஆனது 6.7-இன்ச் டைனமிக் ஐலேண்ட் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் மாடல்களில் மேம்பட்ட புதிய கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இதில் 48எம்பி பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் சென்சார், 13எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா சென்சார்கள் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போர்ட்ரெயிட் ரக புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
அதேபோல் இந்த புதிய ஐபோன் 15 மாடல்களில் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன்களின் ரியர் கேமராக்கள் ஆதரவுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். குறிப்பாக டிஸ்எல்ஆர் கேமராக்களை விட மிகவும் தரமான கேமரா வசதியுடன் இந்த ஐபோன் 15 மாடல்கள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக ஐபோன் 15 மாடல்களில் மிகவும் சக்திவாய்ந்த ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. பின்பு இதில் புகைப்படங்களை எடுக்க பிரத்யேக நியூரல் என்ஜின் உள்ளது. இத்துடன் 5-கோர் ஜி.பி.யு., 6-கோர் சி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, ஐபோன் 15 மாடல்கள் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இவற்றின் கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இதுதவிர 5ஜி அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த போன்களின் உதவியுடன் எந்த இடத்தில் இருந்தும் தெளிவாகப் பேச முடியும்.
அதேபோல் புதிய ஐபோன் 15 மாடல்களுடன் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டி(satellite கனெக்ஷன்) அம்சம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவசரகால SoS என்ற அம்சமும் இந்த போன்களில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் 15 மாடலின் விலை 799 டாலர்கள் என்றும், ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை 899 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு இந்த ஐபோன் 15 சீரிஸ் முன்பதிவு தொடங்கும். பின்பு இந்த போன்கள் வரும் செப்டம்பர் 22-ம் தேதி ஆப்பிள்.காம் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகின்றன.


Click it and Unblock the Notifications