Home
Mobile

iPhone 15 முதல் iPhone 15 Pro Max.. அறிமுகத்திற்கு முன்பே 4 புதிய ஐபோன்களின் விலைகளும் லீக்!

புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. 2023 ஆம் ஆண்டிற்கான ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வு (Apple Event 2023) வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது; இந்நிகழ்வில் மொத்தம் 4 புதிய ஐபோன்கள் அறிமுகமாகும்.

ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரீஸின் கீழ் ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு முன்பே 4 புதிய ஐபோன்களின் விலைகளும் லீக் ஆனது!

ஹை-எண்ட் வேரியண்ட் ஆன ஐபோன் 15 ப்ரோ பிளஸ் மாடலானது ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Ultra) என்கிற புதிய பெயரின் கீழ் வெளியாகும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்கிடையில் அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்த 4 புதிய ஐபோன்களின் விலை நிர்ணயமும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

இந்தாண்டு அறிமுகமாகும் ஐபோன்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் அறிமுகம் செய்யும் "நியூ ஜெனரேஷன்" (New Generation) மாடல்களாக மட்டுமே இருக்கப்போவதில்லை. ஏனென்றால் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆனது "முன் எப்போதும் காணாத அளவிலான" சில முக்கிய மேம்படுத்தல்களை (Major Upgrades) பெறவுள்ளன.

இதன் விளைவாக ஐபோன் 14 சீரீஸ் (iPhone 14 Series) மாடல்களை விட இவைகள் விலை உயர்ந்த மாடல்களாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால்.. அது உண்மை தான். ஆனால் எல்லா ஐபோன் 15 (iPhone 15) மாடல்களுமே அதிக விலைக்கு வரப்போவதில்லை.

ஐபோன் 15 சீரீஸின் ஸ்டாண்டர்ட் மாடல்களின் (அதாவது ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மாடல்களின்) விலையில் கணிசமான அதிகரிப்பு இருக்காது. ஐபோன் 15 இன் விலை 799 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியில் இருந்தும், ஐபோன் 15 பிளஸின் விலை 899 அமெரிக்க டாலர்கள் என்கிற புள்ளியில் இருந்தும் தொடங்கலாம்.

மேற்கண்ட அமெரிக்க விலை நிர்ணயத்தை அப்படியே இந்திய ரூபாய் மதிப்பிற்கு மாற்றினால் முறையே ரூ.66,440 மற்றும் ரூ.74750 ஆக இருக்கும். ஆனால் நிச்சயமாக இது இந்திய விலை நிர்ணயமாக இருக்காது. இதை விட சில ஆயிரங்கள் அதிகமாகவே இருக்கும். இருப்பினும் இது எதிர்பார்த்த அளவிற்கு அதிகமானதாக இல்லை.

இதே நிலைப்பாட்டை ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் நாம் எதிர்பார்க்க முடியாது. அவைகளின் விலை நிர்ணயம் நிச்சயம் அதிகமாக இருக்கும். வெய்போ (Weibo) வழியாக கிடைத்த ஒரு லீக் தகவலின்படி, இவ்விரு ப்ரோ மாடல்களுக்கு முறையே 100 அமெரிக்க டாலர் மற்றும் 200 அமெரிக்க டாலர் என்கிற விலை அதிகரிப்பை பெறலாம்.

ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலை சுமார் 1,099 அமெரிக்க டாலர் ஆகவும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை சுமார் 1,199 அமெரிக்க டாலர் ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவைகளை அப்படியே இந்திய ரூபாய் மதிப்பிற்கு மாற்றினால் முறையே ரூ.91,380 மற்றும் ரூ.99,700ஆக இருக்கும். இருப்பிமும் முன்னரே குறிப்பிட்டபடி, இந்திய விலை நிர்ணயம் இதைவிட அதிகமாகவே இருக்கும்

மேலே குறிப்பிட்டுள்ள விலை நிர்ணயங்கள் எல்லாமே கிடைக்கப்பெற்ற தகவல்கள், லீக்ஸ் மற்றும் யூகங்களின் அடிப்படையில் அமைந்தவை என்பதையும், வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று நடக்கும் ஆப்பிளின் ஐபோன் 15 வெளியீட்டு நிகழ்வில் தான் உண்மையான விலை விவரங்கள் தெரியவரும் என்பதையும் இங்கே மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.

குறிப்பிட்ட ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வில் 4 புதிய ஐபோன்கள் மட்டுமின்றி வேறு சில ஆப்பிள் தயாரிப்புகளும் அறிமுகமாகும். அறிக்கைகளின்படி, குறிப்பிட்ட நாளில் ஆப்பிள் வாட்ச் 9 (Apple Watch 9) மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 (Apple Watch Ultra 2) ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களும் அறிமுகம் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
iPhone 15 iPhone 15 Plus iPhone 15 Pro iPhone 15 Pro Max Price Leaked Ahead Apple Event on Sep 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X