Home
Mobile

ஆர்டர் அள்ளுது.. iPhone 15, iPhone 14 மீது அபார விலை குறைப்பு.. iPhone 16 வந்த வேகத்தில் Apple அதிரடி!

iPhone 15 iPhone 14 Price Cut: ஆப்பிள் அதன் புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களை அறிமுகம் செய்த வேகத்தில், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 மாடல்கள் மீது கணிசமான விலை குறைப்புகளை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும், புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முந்தைய ஜெனரேஷன் ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்படுவது வழக்கம் தான். அப்படியாக இந்தாண்டு மொத்தம் 4 பழைய ஐபோன்கள் மீது விலை குறைக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்கள்? அவைகளின் அசல் விலை என்ன? விலைக்குறைப்பிற்கு பிறகான விலை என்ன? இதோ விவரங்கள்:

ஐபோன் 15 சீரிஸின் கீழ் உள்ள ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) ஆகிய இரண்டு மாடல்களின் விலைகளுமே குறைக்கப்பட்டுள்ளது. ரூ.79,600 க்கு அறிமுகமான ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.69,900 க்கு வாங்க கிடைக்கும்.

iPhone 15, iPhone 14 மீது அபார விலை குறைப்பு!

இதேபோல ரூ.89,600 க்கு அறிமுகமான ஐபோன் 15 மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கும் மற்றும் ரூ.1,06,600 க்கு அறிமுகமான ஐபோன் 15 மாடலின் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.99,900 க்கு வாங்க கிடைக்கும்.

ரூ.89,600 க்கு அறிமுகமான ஐபோன் 15 பிளஸ் மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ரூ.99,600 க்கு அறிமுகமான ஐபோன் 15 பிளஸ் மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.89,900 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக

ரூ.1,19,600 க்கு அறிமுகமான ஐபோன் 15 பிளஸ் மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கும் மற்றும் ரூ.1,19,600 க்கு அறிமுகமான ஐபோன் 15 மாடலின் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.1.09,900 க்கு வாங்க கிடைக்கும்.

ஐபோன் 14 சீரிஸின் கீழ் உள்ள ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) ஆகிய இரண்டு மாடல்களும் கூட விலைக்குறைப்பை பெற்றுள்ளன. ரூ.69,600 க்கு அறிமுகமான ஐபோன் 14 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கும்.

இதேபோல ரூ.79,600 க்கு அறிமுகமான ஐபோன் 14 மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.69,900 க்கு வாங்க கிடைக்கும் மற்றும் ரூ.99,600 க்கு அறிமுகமான ஐபோன் 14 மாடலின் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இனிமேல் ரூ.89,900 க்கு வாங்க கிடைக்கும். ஐபோன் 14 பிளஸ் மாடலை பொறுத்தவரை, இப்போது இதன் விலை ரூ.69,900 முதல் தொடங்குகிறது.

மேற்கண்ட புதிய விலைகள் ஆனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் (Apple Store Online), ஆப்பிள் ஸ்டோர் லோக்கேஷன்கள் (, Apple Store locations) மற்றும் பார்ட்னர் ரீடெயில் அவுட்லெட்கள் (Partner retail outlets) உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் மறுவிற்பனையாளர்களிடம் உடனடியாக அமலுக்கு வந்தது.

முன்னரே குறிப்பிட்டபடி, ஆப்பிள் நிறுவனம் அதன் இட்ஸ் க்ளோடைம் வெளியீட்டு நிகழ்வில் (Its Glowtime Launch Event) புதிய ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) மாடல்களை அறிமுகம் செய்தது. ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.79,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஐபோன்க்ளுடன் சேர்த்து ஆப்பிள் ஏர்போட்ஸ் 4 இயர்பட்ஸ் (Apple AirPos 4) வேரியண்ட்கள், ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் (Apple AirPods Max) ஹெட்போன்ஸின் புதிய கலர் ஆப்ஷன்கள், ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோவிற்கான புதிய அம்சங்கள் மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

Best Mobiles in India

English summary
iPhone 15 iPhone 15 Plus iPhone 14 iPhone 14 Plus gets Price Cut in India After iPhone 16 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X