iPhone 15, iPhone 14 மீது திடீர் விலை குறைப்பு.. iPhone 16 அறிமுகத்தை முன்னிட்டு Flipkart, Amazon அதிரடி!
iPhone 15 iPhone 14 Discount: இன்று இரவு, அதாவது செப்.9 இரவு நடக்கும் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வில், ஆப்பிள் அதன் புதிய ஐபோன் 16 சீரீஸை அறிமுகம் செய்யவுள்ள நிலையில், சற்றே பழைய ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 மீது திடீர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை ரூ.80,000 முதல் தொடங்குமென எதிர்பார்க்கப்படும் புதிய ஐபோன் 16-ஐ வாங்கும் அளவிற்கு உங்களிடம் பட்ஜெட் இல்லை என்றால்.. முன்னெப்போதை விடவும் மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14-ஐ வாங்க இதுவே சிறந்த நேரமாக இருக்கும்.
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 ஆகிய இரண்டுமே இப்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கின்றன. ஐபோன் 15 மாடலானது, முதலில் ரூ.79,600-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது ரூ.69,999-க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.9,601 பிளாட் தள்ளுபடியை பெற்றுள்ளது.

நேரடி தள்ளுபடி தவிர்த்து ஐபோன் 15 மாடலை வாங்கும் வடிக்கையாளர்களுக்கு பல வகையான வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கிறது. குறிப்பிட்ட வங்கியின் கார்டுகளை நீங்கள் வைத்து இருக்கும் பட்சத்தில், ஐபோன் 15-ன் விலையை மேலும் குறைக்க முடியும். ஐபோன் 15 மீதான இந்த விலை வீழ்ச்சியானது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலும் காண முடிகிறது.
ஒருவேளை நீங்கள் இன்னும் பழைய மற்றும் இன்னும் மலிவான ஐபோனை தேடுகிறீர்கள் என்றால், ஐபோன் 14-ஐ கருத்தில் கொள்ளலாம். இது அதன் அசல் வெளியீட்டு விலையான ரூ.69,600-க்கு பதிலாக ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.11,601 பிளாட் தள்ளுபடியை பெற்றுள்ளது. மேலும் ஐபோன் 15 மாடலை போலவே ஐபோன் 14 மீதும் கூடுதல் வங்கி சலுகைகள் அணுக கிடைக்கிறது.
இன்று இரவு நடக்கும் ஆப்பிள் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வை பார்ப்பது எப்படி? இந்நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் குபெர்டினோ பார்க்கில் நடைபெறவுள்ளது. இது சரியாக இந்திய நேரடி இரவு 10.30 மணிக்கு தொடங்கும். இது 3 தளங்களின் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய கிடைக்கும்: ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Apple Official Website), ஆப்பிள் யூடியூப் சேனல் (Apple YouTube Channel) மற்றும் ஆப்பிள் டிவி ஆப் (Apple TV App).
இந்நிகழ்வின் ஐபோன் 16 சீரிஸின் (iPhone 16 Series) கீழ் 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ். இதனுடன் ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 10 (Apple Watch Series 10), ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 (AirPods 4) மற்றும் ஆப்பிள் ஏர் பாட்ஸ் எஸ்இ (AirPods SE) போன்றவைகளையும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 16 சீரீஸின் கீழ் வரும் 4 மாடல்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஆப்பிள் ஹப் வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, ஐபோன் 16 மாடல் ஆனது $799 (சுமார் ரூ. 67,100) க்கும், ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 (தோராயமாக ரூ. 75,500) க்கும், ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது $1,099 (சுமார் ரூ. 92,300) க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது $1,199 (சுமார் ரூ. 1,00,700) க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்திய விலை நிர்ணயமானது மேற்கண்ட விலைகளை விட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் இந்தியாவிற்கு வரும் ஐபோன் 16 சீரீஸ் மாடல்களின் மீது இறக்குமதி வரிகள் மற்றும் கூடுதல் செலவுகள் திணிக்கப்படும். இருப்பினும் இந்திய சந்தைக்கான விலைகள் கடந்த ஆண்டு அறிமுகமான ஆனது ஐபோன் சீரிஸின் விலைகளுடன் "பெரும்பாலும்" ஒற்றுப்போகலாம்!


Click it and Unblock the Notifications








