iPhone 16 ஜுரம் ஆரம்பம்.. ரூ.14,601 வரலாற்று விலை குறைப்பு.. iPhone 15-ஐ வாங்க இதான் சரியான நேரம்!
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) மாடல்களை இன்னும் ஓரிரு வாரங்களில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய 4 மாடல்களை உள்ளடக்கிய ஐபோன் 16 சீரிஸின் வெளியீட்டு நிகழ்வானது (Launch Event) ஆனது வருகிற செப்.10 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஓராண்டு பழைய மாடலான ஐபோன் 15 (iPhone 15) மீது மிகப்பெரிய பிளாட் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் மன்த்-எண்ட் மொபைல்ஸ் ஃபெஸ்ட் (Month End Mobiles Fest) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது. ஆகஸ்ட் 26 வரை நேரலையில் இருக்கும் இந்த விற்பனையின் ஒரு பகுதியாக ஐபோன் 15 மீது ரூ.14,601 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.64,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், ஆப்பிளின் அதிகாரப்பூர்வமாக ஸ்டோரில் இதே மாடல் ரூ 79,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக பிளிப்கார்ட் வலைத்தளமானது எந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இல்லாமல் ஐபோன் 15 மீது ரூ.14,601 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது!
கடந்த ஆண்டு வெளியான எந்தவொரு ஐபோன்களிலும் இதுவரை பார்க்காத அதிகபட்ச தள்ளுபடி சலுகை இதுவாகும். அதுவும் எந்த வங்கி சலுகையும் இல்லாமல் இவ்வளவு பெரிய பிளாட் டிஸ்கவுண்ட் கிடைப்பது, ஐபோன் வாங்கும் ஆற்வம் கொண்ட எந்தவொரு வாடிக்கையாளருக்குமான ஒரு நல்ல சான்ஸ் ஆகும். ஐபோன் 16 அறிமுகமான பின்னரும் கூட ஐபோன் 15 மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்படும்; ஆனால் அது இந்த அளவிற்கு அதிகமானதாக இருக்குமா என்பது சந்தேகம் தான்!
ரூ.14,601 நேரடி தள்ளுபடியை தவிர்த்து ஐபோன் மீது ரூ. 42,100 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி சலுகையும் அணுக கிடைக்கிறது. ஆனால் இந்த பிளாட்ஃபார்ம் ஒருபோதும் முழு எக்ஸ்சேஞ்ச் வேல்யூவையும் வழங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்ல் உங்கள் பழைய மொபைலின் வயது மற்றும் பிளிப்கார்ட்டின் நிபந்தனைகளின் அடிப்படையில் தான் தள்ளுபடி தீர்மானிக்கப்படும்.
ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் ஐபோன் 15 ஆனது ரூ.82,900-க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது ரூ.89,900-க்கு அறிமுகம் செய்யப்படலாம். ப்ரோ வேரியண்ட் ஆன ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது ரூ.1,37,900 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். கடைசியாக உள்ள ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆனது ரூ.1,59,900-க்கு அறிமுகம் செய்யப்படலாம்
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஒரு பெரிய 6.9 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். அதாவது இதன் முன்னோடியின் 6.7 இன்ச் மாடல்களை விட குறிப்பிடத்தக்க அப்கிரேடை பெறலாம். கேமராக்களை பொறுத்தவரை இது புதிய 48எம்பி அல்ட்ரா-வைட் கேமராவை கொண்டிருக்கலாம். மேலும் இதன் கேமரா செட்டப்பில், ஈர்க்கக்கூடிய ஜூம் திறன்களை வழங்க கூடிய சூப்பர் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா இடம்பெறும் என்றும் வதந்தி பரவுகிறது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, முந்தைய மாடலின் 4,441எம்ஏஎச் உடன் ஒப்பிடும்போது ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆனது பெரிய 4,676எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம். இது 40W வயர்டு சார்ஜிங் மற்றும் 20W MagSafe சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரலாம். கடைசியாகஇது ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஏ18 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படும்.


Click it and Unblock the Notifications








