Home
Mobile

ஆஃபர்னா இப்படி இருக்கணும்.. ரூ.14,000 இல்ல.. அதுக்கும் மேல.. iPhone 15-ஐ அள்ளி போட இதுவே சரியான நேரம்!

ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) மாடல்கள் ஆனது அடுத்த மாதம், அதாவது 2024 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களுக்காக நீங்கள் அதிக பணம் செலவழிக்க விரும்பவில்லை, ஆனாலும் கூட ஐபோன் வாங்க வேண்டும் என்கிற ஆசை உங்களிடம் இருந்தால்.. நீங்கள் உடனே செல்ல வேண்டியது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்திற்கு தான். 2024 இந்திய சுந்தந்திர தினத்தை (Independence Day 2024) முன்னிட்டு பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது.

இந்த விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 15 மீது மிகப்பெரிய அளவிலான நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. ஐபோன் 15 ஆனது தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த டிவைஸ்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.65,499 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இது அதன் அசல் விலையான ரூ.79,900-ல் இருந்து ரூ.14,401 விலை குறைப்பு அல்லது நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த விலையை இன்னும் குறைக்க முடியும்.

iPhone 15-ஐ அள்ளி போட இதுவே சரியான நேரம்!

அதற்கு உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி கார்டு இருக்க வேண்டும். இதன் கீழ் செய்யப்படும் கார்ட்லெஸ் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1800 வரையிலான தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஐபோன் 15 மாடலின் இறுதி ஆபர் விலையை ரூ.63,699 ஆக குறைக்க முடியும். எக்ஸ்சேன்ஜ் ஆபரை பொறுத்தவரை, உங்களிடம் பழைய ஐபோன் இருந்தால் அதற்கு ரூ.55,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைக்கும்.

ஐபோன் 15 முக்கிய அம்சங்கள்: நினைவூட்டும் வண்ணம் இது 6.1 இன்ச் டிஸ்பிளே, டைனமிக் ஐலேண்ட் நாட்ச் வடிவமைப்பு, 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப், நாள் முழுவதும் பேட்டரி லைஃப் என்கிற வாக்குறுதி, ஆப்பிளின் ஏ16 பயோனிக் சிப், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது பெரிய அளவிலான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (Apple iPhone 14 Plus) மாடலானது, ரூ.53,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதேபோல கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7) ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.32,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.38,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. மோட்டோ எட்ஜ் 50 ஃப்யூஷன் (Moto Edge 50 Fusion) ஸ்மார்ட்போன் ஆனது, பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ் ரூ.21,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 7 ப்ரோ (Google Pixel 7 Pro) மாடலானது, பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ் எப்போதும் இல்லாத மிகவும் குறைவான விளையான ரூ.42,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. மேலும் போக்கோ எப்6 (Poco F6) ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.25,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

ஒப்போ பைண்ட் என்3 பிளிப் (Oppo Find N3 Flip) ஸ்மார்ட்போன் ஆனது எப்போதும் இல்லாத குறைந்த விலையான ரூ.53,499 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடல் ஆனது தள்ளுபடி விலையான ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ரூ.31,249 க்கும் மற்றும் ரெட்மி 13சி ரூ.10,499 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 15 gets massive discount on Flipkart Flagship Sale Till Aug 15 Ahead iPhone 16 Launch Next Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X