பிச்சிக்குது iPhone சேல்.. ரூ.17,901 விலை குறைப்பு.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஐபோன் பிரியர்களும் அமேசான் (Amazon) தளத்தில் குவியும்படி ஐபோன் 16இ (iPhone 16e) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. ஆனால், இந்த விற்பனையை தொடர்ந்து முந்தைய மாடல்களுக்கு நம்ப முடியாத விலை குறைப்பு கிடைக்கிறது. இதில் ஐபோன் 15 (iPhone 15) மாடலுக்கு ரூ.17,901 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, சென்சார் ஷிப்ட் கேமரா, 15W மேக்சேப் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த ஐபோன் 15 மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐபோன் 15 அமேசான் சேல் (iPhone 15 Amazon Sale): இந்த ஐபோனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,900ஆக இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ஆர்டர் செய்தால் வெறும் ரூ.61,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆகவே, ரூ.17,901 விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,860 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மேலும், ரூ.57,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் ஐபோன் பிரியர்களுக்கு லாபத்தை தரும்படியே இந்த விலை குறைப்பு இருக்கிறது. அதேபோல ரூ.89,900 பட்ஜெட்டில் வெளியான 256 ஜிபி வேரியண்ட் இப்போது, ரூ.71,499 விலையிலும், ரூ.1,09,900 பட்ஜெட்டில் வெளியான 512 ஜிபி வேரியண்ட் ரூ.84,999 விலையிலும் கிடைக்கிறது.
ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications): இந்த போனில் ஐஓஎஸ் 17 (iOS 17) மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (16 Core Neural Engine) கொண்ட4என்எம் பயோனிக் ஏ16 (4nm Bionic A16) சிப்செட் கிடைக்கிறது. ட்ரூ டோன் (True Tone) கொண்ட 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு கிடைக்கிறது.
இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஐபோன் 15 மாடலில் 15W மேக்சேப் (MagSafe) சார்ஜிங் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி-சி ஃபாஸ்ட் சார்ஜிங் (USB-C Fast Charging) கிடைக்கிறது.
இந்த பேட்டரி மூலம் 20 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். 7.80 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல 171 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த போனில் ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) கொண்ட 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், 2X டெலிபோட்டோ (2X Telephoto), போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), எச்டிஆர் (HDR), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் பிக்சல் போகஸ் (Pixel Focus) கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ட்ரூடெப்த் கேமராவுக்கு ரெடினா ஃபிளாஷ் (Retina Flash), ஆட்டோபோகஸ் (Auto Focus), டால்பி விஷன் மற்றும் ஃபேசியல் ஐடி சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ஐபோன் 15 போனில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், நானோ (Nano) + ஈசிம் (eSIM) கனெக்டிவிட்டி உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. நம்ப முடியாத கம்மி விலையில் பிரீமியம் ஐபோன் மாடலை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு பக்காவான ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications