Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.28,401 விலை குறைப்பு.. கிடைக்காத ரேட்ல iPhone 15.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) ஒட்டுமொத்த ஐபோன் பிரியர்களும் எதிர்பார்த்த டிஸ்கவுண்ட் வந்துவிட்டது. இதுவரையில் கொடுக்கப்படாத வகையில் ஐபோன் 15 (iPhone 15) போனுக்கு முழுதாக ரூ.28,401 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், ஐபோன் 15 மாடலின் விற்பனை சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்த போனின் பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? எக்ஸ்சேஞ்ச் போனஸ் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் மிகப்பெரிய விற்பனை இப்போது தொடங்கிவிட்டது. இதில் ஐபோன், சாம்சங் உள்ளிட்ட பிரீமியம் பிராண்ட்களின் போன்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதில் ஆப்பிள் பிரியர்களின் கனவு மாடலான ஐபோன் 15 போனுக்கு கொடுக்கப்பட்ட டிஸ்கவுண்ட் மிரள விட்டிருக்கிறது. கூடவே விற்பனையை பல மடங்கு சூடுபிடிக்க செய்துள்ளது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.28,401 விலை குறைப்பு.. கிடைக்காத ரேட்ல!

ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications): இந்த போனின் கேமரா பீச்சர்களே கஸ்டமர்களை தட்டித் தூக்குகிறது. 2ஆவது ஜெனரேஷன் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-Shift Optical Image Stabilisation) டெக்னாலஜி கொண்ட 48 எம்பி வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 2X டெலிபோட்டோ சப்போர்ட் உள்ளது.

மேலும், ஆப்பிள் போன்களில் மட்டுமே கிடைக்கும், போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) வருகிறது அதேபோல டால்பி விஷன் (Dolby Vision) கொண்ட எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் (HDR Video Recording) வருகிறது. அதேபோல 4K எச்டிஆர் (4K HDR) வீடியோ ரெக்கார்டிங் கொண்ட சினிமாடிக் மோட் (Cinematic Mode) வருகிறது.

மேலும், 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. செல்பீ ஷூட்டரை பார்க்கையில், ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் பிக்சஸ் போகஸ் (Focus Pixels) கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) கேமரா வருகிறது. ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) வருகிறது. டால்பி விஷன், 4K வீடியோ ரெக்கார்டிங், எச்டிஆர் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடல் வருகிறது. இதுவொரு 1600 பீக் பிரைட்னஸ் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 2000 நிட்ஸ் பீக் அவுட்டோர் பிரைட்னஸ் வருகிறது. செராமிக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு உள்ளது.

இதுபோக எச்டிஆர் மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் வருகிறது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வருகிறது. ஐஓஎஸ் 17 (iOS 17) மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) வருகிறது. அல்ட்ரா ஃபாஸ்ட் பர்ஃபாமென்ஸ் கொண்ட சிக்ஸ்-கோர் பயோனிக் ஏ16 4என்எம் (Six-Core Bionic A16 4nm) சிப்செட் மற்றும் 5 கோர் ஜிபியு கிராபிக்ஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

15W மேக்சேப் சார்ஜிங் மற்றும் டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. இந்த ஐபோனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ.79,900ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் வெறும் ரூ.54,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக யுபிஐ மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, இந்த ஐபோன் 15 போனை ரூ.28,401 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.10000-க்கும் மேல் பழைய மொபைல்களுக்கு ஏற்ப எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. பிங்க் (Pink), எல்லோ (Yellow), கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோல பல்வேறு மாடல்களுக்கு சலுகை இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 15 Gets 21 Percent Discount on Flipkart Big Billion Days Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X