Home
Mobile

iPhone 15 மீது ரூ.20,000 விலை குறைப்பு.. iPhone 16 விலைகள் லீக் ஆன வேகத்தில் Flipkart பார்த்த வேலை!

iPhone 15 Flipkart Offer: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 சீரீஸ் (Apple iPhone 16 Series) மாடல்கள் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் 'இட்ஸ் க்ளோடைம்' நிகழ்வின் (It's Glowtime Event) போது உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த சீரிஸின் கீழ் (வழக்கம் போல) மொத்தம் 4 புதிய ஐபோன் மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்.

அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஐபோன் 16 சீரிஸின் கீழ் உள்ள 4 மாடல்களின் விலை நிர்ணயமும் (iPhone 16 Series Price Details) ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன. இதற்கிடையில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட, கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 15 மாடலின் 512ஜிபி வேரியண்ட் (iPhone 15 512GB Variant) மீது ரூ.20,000 நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.

iPhone 15 மீது ரூ.20,000 விலை குறைப்பு!

பிளிப்கார்ட்டில் தற்போது ஐபோன் 15-ன் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த வேரியண்ட்டின் அசல் விலை ரூ.1,09,999 ஆகும். அதாவது ஐபோன் 16 சீரீஸ் அறிமுகத்தையொட்டி ஐபோன் 15-ன் குறிப்பிட்ட வேரியண்ட் மீது ரூ.20,000 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் ஐபோன் 15-ன் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் வழியாக இது ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீதும் அபார சலுகை கிடைக்கிறது. ஆரம்பத்தில் ரூ.89,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 பிளஸ்-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.75,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது அதிகாரப்பூர்வ விலையில் இருந்து ரூ.13,601 நேரடி தள்ளுபடி அணுக கிடைக்கிறது.

ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஆப்பிள் ஹப் வழியாக கிடைத்த லீக் தகவலின்படி ஐபோன் 16 மாடலின் பேஸிக் வேரியண்ட் $799 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.67,100 க்கு) அறிமுகம் செய்யப்படலாம். அடுத்ததாக உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 க்கு (அதாவது தோராயமாக ரூ.75,500) அறிமுகம் செய்யப்படலாம்.

அடுத்ததாக உள்ள ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,099 க்கு (சுமார் ரூ.92,300) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஐபோன் 16 சீரீஸின் ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,199 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

மேற்கண்ட விலைகள் எல்லாமே அமெரிக்க சந்தைக்கான விலைகளாக இருக்கலாம். இதன் அர்த்தம் - ஐபோன் 16 சீரிஸின் இந்திய விலை நிர்ணயமானது அமெரிக்க விலையுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமாகவே இருக்கும். ஆனால் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் 2024-க்கான புதிய ஐபோன் மாடல்கள் ஆனது பழைய 2023-ல் வெளியான ஐபோன் மாடல்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவிலான விலை உயர்வை சந்திக்காது என்று கூறப்படுகிறது.

அதாவது ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 ப்ரோவின் விலைகளை ரூ.5,000 மற்றும் ப்ரோ மேக்ஸின் விலையை ரூ.20,000 உயர்த்தியதால், ஐபோன் 16 சீரீஸ் மாடல்கள் ஆனது பெரிய அளவிலான விலை உயர்வை பெற அதிக வாய்ப்பில்லை. இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மையானதாக இருக்கும் என்பது செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது தெரிய வரும்; அது வரையிலாக யூகங்களோடு காத்திருப்போம்!

Best Mobiles in India

English summary
iPhone 15 512GB Storage gets Massive Discount on Flipkart Ahead iPhone 16 Launch on Sep 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X