உடாத.. உடாத.. தொக்கா ரூ.31,901 ரேட் கட்ல iPhone.. விட்டா போச்சு.. அமேசானில் பிச்சிக்குது ஆர்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஐபோன் 15 (iPhone 15) ஸ்மார்ட்போனுக்கு இதுவரையில் கிடைக்காத விலை குறைப்பு கிடைக்கிறது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த விலை குறைப்பு கிடைக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, 48 எம்பி மெயின் கேமரா, 128 ஜிபி மெமரி, ஐஓஎஸ் 17 போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஐபோன் 15 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.79,900ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.47,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. ஆகவே, நேரடியாக ரூ.31,901 விலை குறைப்பில் கிடைக்கிறது. இதுபோக ரூ.2,250 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடிக்கு எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்ய வேண்டும்.

ஆகவே, ரூ.45,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், எஸ்பிஐ டெபிட் கார்டுக்கும் ரூ.2,250 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக ரூ.43,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற்று கொள்ளலாம். பிளாக் (Black), ப்ளூ (Blue), பிங்க் (Pink), எல்லோ (Yellow) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications): ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (2ஆவது ஜெனரேஷன்) டெக்னாலஜி கொண்ட 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 2X டெலிபோட்டோ, 4K எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் சினிமாடிக் மோட் (Cinematic Mode) கிடைக்கிறது.
இதுபோக பிக்சல் போகஸ் (Pixel Focus), போட்டானிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) கிடைக்கிறது. பிரீயமியம் கேமரா பீச்சர்கள் கிடைப்பதால், குவாலிட்டி பட்டையை கிளப்பும்படி இருக்கும். மேலும், 12 அல்ட்ரா வைடு செகண்டரி கேமரா கிடைக்கிறது. இதில் 120 டிகிரி வைடு கிடைக்கிறது.
இந்த மெயின் கேமரா மட்டுமல்லாமல், 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமராவிலும் டால்பி விஷனில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஆனால், இதில் ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) கிடைக்கிறது. இதுபோக போகஸ் பிக்சல் மற்றும் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ஐபோன் 15 மாடலில் ஐஓஸ் 17 (iOS 17) கிடைக்கிறது.
மேலும், அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிக்ஸ்-கோர் ஏ16 பயோனிக் 4என்எம் (Six-Core A16 Bionic 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த ஐபோன் 15 மாடலில் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் கொண்ட 6.1 இன்ச் (2556 x 1179 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எஸ்டிஆர் (Super Retina XDR) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஐபோன் 15 மாடலில் IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களும் கிடைக்கின்றன.
15W மேக்சேப் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி (Lithium-ion Battery) கிடைக்கிறது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் (USB-C Fast Charging) கிடைக்கிறது. 20 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும். கிட்டத்தட்ட பாதிப்பாதி விலையில் இப்போது அமேசான் தளத்தில் கிடைப்பதால், ஆப்பிள் பிரியர்களுக்கு விடாக்கூடாத ஆஃபராக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








