வருது புதுசு.. பழசுக்கு ரூ.26,500 ரேட் கட்.. iPhone 14-க்கு யோகம்.. OLED டிஸ்பிளே.. 12MP கேமரா.. 15W சார்ஜிங்!
ஐபோன் பிரியர்கள் அறக்க பறக்க ஆர்டர் போடும்படியான விலை குறைப்பில் ஐபோன் 14 (iPhone 14) கிடைக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) வெளியாக இருப்பதால் பழைய மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஐபோன் 14 மாடலானது ரூ.26,500 விலை குறைப்பில் கிடைக்கிறது. இதில் பேங்க் டிஸ்கவுண்ட் இருக்கிறது. இந்த ஐபோன் மாடலின் மார்கெட் விலை என்ன? டிஸ்கவுண்ட் விலை என்ன? பீச்சர்கள் எப்படி? விவரங்கள் இதோ.
ஐபோன் எஸ்இ 4 மலிவு விலை மாடலாக வெளியாக இருக்கிறது. இதனால், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். ரூ.50,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இது எஸ்இ அல்லாத மாடல்களின் அறிமுக விலையைவிட கம்மியாக இருக்கும். ஆனால், அதில் கொடுக்கப்படும் பீச்சர்கள் லேட்டஸ்ட்டாக எதிர்பார்க்கலாம்.

இந்த ஐபோன் எஸ்இ 4 மாடலானது, இன்று (பிப்ரவரி 19) வெளியாக இருக்கிறது. இதனால், ஏற்கனவே மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள பழைய மாடல்களுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஐபோன் 14 போனின் விலை ஆப்பிள் பிரியர்களை மூக்கில் விரல் வைக்கு செய்துள்ளது. இந்த போனின் மார்கெட் விலை ரூ.79,900ஆக இருக்கிறது.
ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ரூ.54,400 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல், ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். மேலும், ரூ.51,680 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, ரூ.26,500 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம்.
இந்த விலைக்கு என்னென்ன பீச்சர்கள் கிடைக்கிறது? இந்த ஐபோன் 14 மாடலில் ஐஓஎஸ் 16 (iOS 16) கொண்ட சிக்ஸ் கோர் ஏ15 பயோனிக் 5என்எம் (Six Core A15 Bionic 5nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி மெமரி (மேற்கண்ட விலை குறைப்பில் கிடைக்கும் வேரியண்ட்), 256 ஜிபி மெமரி மற்றும் 512 மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
செராமீக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு உள்ளது. இந்த பாதுகாப்புடன் 6.1 இன்ச் (2532 × 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் ட்ரூ டோன் (True Tone) மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் கிடைக்கிறது.
15W மேக்சேப் சார்ஜிங், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 20 மணி நேரங்கள் பேக்கப் கொடுக்கும்படி பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி கிடைக்கிறது. 12 எம்பி வைடு-ஆங்கிள் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. வைடு-ஆங்கிள் கேமராவில் ஓஐஎஸ் டெக்னலாஜி கிடைக்கிறது. ஆனால், இது சென்சார்-ஷிப்ட் அவுட்புட் கொடுக்கும் வெர்ஷனாகும்.
மேலும், 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ரியர் கேமராவில் ட்ரூ டோன் ஃபிளாஷ் மற்றும் செல்பீ ஷூட்டர் ரெடினா ஃபிளாஷ் கிடைக்கிறது. 4K ரெசொலூஷன் வீடியோ ஷூட் சப்போர்ட் உள்ளது. போட்டோனிக் என்ஜின், ஆட்டோ போகஸ், சினிமாடிக் மோட் போன்ற பீச்சர்களை இந்த கேமரா கொடுக்கிறது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








