Home
Mobile

கனவுல நினைக்காத ஆபர்.. ரூ.30,901 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்ல iPhone 14.. இப்பவே ஆர்டர் போடுங்க.. போனா வராது!

ஐபோன் பிரியர்கள் கனவிலும் நினைக்காத விலை குறைப்பில் ஐபோன் 14 (iPhone 14) இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ரூ.30,901 விலை குறைப்பில் வந்தால், விற்பனை சக்கைப்போடு போடாமலா இருக்கும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பின்னி எடுக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, போட்டோனிக் என்ஜின் கேமரா, 2X ஆப்டிகல் ஜூமிங், 15W மேக்சேப் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஐபோன் 14 போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் மாடல்களுக்கு இதுவரையில் கொடுக்கப்படாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதிலும், பழைய மாடல்களுக்கு விலை குறைப்புடன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுவதால், கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி விலையில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஐபோன் 14 மாடலானது, இப்போது ரூ.30,901 விலை குறைப்பில் வருகிறது.

கனவுல நினைக்காத ஆபர்.. ரூ.30,901 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்ல iPhone!

ஐபோன் 14 பிளிப்கார்ட் விற்பனை (iPhone 14 Flipkart Sale): இந்த ஐபோனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,900ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.50,999 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் பேங்க் டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.

இந்த விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் போக ரூ.30,901 கம்மியாக விற்பனைக்கு கிடைக்கிறது. வெறும் ரூ.48,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதைவிட கம்மியான விலைக்கு கிடைக்காது என்பதால், ஐபோன் பிரியர்களுக்கு இந்த பக்காவான நேரமாகும். இருப்பினும், பழைய மாடலாக இருப்பதால், என்னென்ன பீச்சர்களை கொடுக்கிறது என்பதை பாருங்கள்.

ஐபோன் 14 அம்சங்கள் (iPhone 14 Specifications): இந்த ஐபோன் கிட்டத்தட்ட 3 வருடங்கள் பழைய மாடலாக இருப்பதால், ஐஓஎஸ் 16 (iOS 16) மட்டுமே கிடைக்கிறது. அதேபோல 5என்எம் சிக்ஸ் கோர் பயோனிக் ஏ15 (5nm Six Core Bionic A15) சிப்செட் மற்றும் 5 கோர் ஜிபியு, 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) சப்போர்ட் வருகிறது. சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே உள்ளது.

6.1 இன்ச் (2532 × 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) பேனல் உள்ளது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் கிடைக்கிறது. மேலும், ஐபோன்களில் மட்டும் கிடைக்கும் ட்ரூ டோன் (True Tone) வருகிறது. மேலும், எச்டிஆர் (HDR) அவுட்புட் கொடுக்கிறது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி கொண்ட வேரியண்ட்களும் இதில் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டில் எந்தவித தயக்கமும் கொடுக்காதபடி கேமரா சிஸ்டம் இருக்கிறது. 12 எம்பி வைடு ஆங்கிள் மெயின் + 12 எம்பி அல்ட்ரா வைடு செகண்டரி கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் (Sensor-shift OIS) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixels) வருகிறது.

மேலும், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் சினிமாடிக் மோட் (Cinematic Mode) ஆகியவற்றில் 4K வீடியோ ஷூட் கொடுக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), 2X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 5X டிஜிட்டல் ஜூமிங் வருகிறது. இதே பீச்சர்களுடன் 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதிலும் ஸ்லோவ் மோஷன் சப்போர்ட் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), பில்ட்-இன் லித்தியம் பேட்டரி மற்றும் 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) சப்போர்ட் வருகிறது. 7 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். ஆகவே, ப்ரொடெக்ட் ரெட், ப்ளூ, மிட்நைட் பிளாக், ரெட், ஸ்டார்லிட் ஒயிட், எல்லோ, பர்பிள் போன்ற கலர்களில் பிரீமியம் லுக்கில் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 With 128GB Storage Gets Huge Price Cut in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X