Home
Mobile

Flipkart பிச்சுக்கிச்சு.. பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் iPhone மாடல்.. ஆர்டர் போட அடிதடியே நடக்குமே!

ஐபோன் 17 (iPhone 17) வந்ததாலும் வந்தது. கிட்டத்தட்ட எல்லா பழைய ஐபோன் மாடல்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது அதன் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 விற்பனையின் (Flipkart Big Billion Days Sale 2025) போது ஐபோன் 14 மாடலை "கிட்டத்தட்ட" பாதிக்கு பாதி விலையில் விற்பனை செய்யவுள்ளது

பிளிப்கார்ட் வலைதளத்தின் இந்த பண்டிகை விற்பனை நிகழ்வின் போது, கடந்த ​​செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 (iPhone 14) மாடலானது ரூ.40,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த சிறப்பு விற்பனை வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.

Flipkart பிச்சுக்கிச்சு.. பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் iPhone!

பழைய ஐபோன் 14 மாடலை தவிர்த்து, கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் மாடல்களும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். குறிப்பாக ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டுள்ளவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

ஐபோன் 14 மீதான ஆபர்: பிளிப்கார்ட் மொபைல் ஆப் (Flipkart Mobile App) வழியாக ஐபோன் 14 மீது கிடைக்கும் ஆபர் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி வங்கி தள்ளுபடியுடன் சேர்த்து ஆப்பிள் ஐபோன் 14 மாடல் ஆனது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும்

தற்போது ​​128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 14 மாடல் ஆனது ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் கடந்த செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஐபோன் 14 மாடலின் விலை நிர்ணயம் ரூ.79,900 ஆக இருந்தது. ஆக ஐபோன் 14 ஆனது "கிட்டத்தட்ட" பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 16 சீரீஸ் மீதான ஆபர்கள்: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் மீதும் ஆபர்கள் இருக்கும். இந்த இரண்டு மாடல்களுமே மிகப்பெரிய தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது ரூ. 70,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது ரூ. 90,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தள்ளுபடிகளில் - வங்கி சலுகைகளும் அடங்கும் என்பதை பிளிப்கார்ட் உறுதி செய்துள்ளது

நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடல் ஆனது ரூ.1,19,900 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல் ஆனது ரூ.1,44,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய ஐபோன் 17 சீரீஸ் மீதான ஆபர்கள்: இந்திய நேரப்படி செப்டம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் முன்பதிவு செய்ய கிடைக்கும். பின்னர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வலைத்தளம் மூலம் ஐபோன் 17 சீரிஸை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும், ரூ.5,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.

இதேபோல ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில், ஐபோன் 17-க்கான இஎம்ஐ திட்டங்கள் மாதத்திற்கு ரூ.12,983 முதல் தொடங்குகின்றன. ஐபோன் 17 ஏர் ஆனது மாதத்திற்கு ரூ.19,150 முதல் தொடங்குகிறது; ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்க்கான இஎம்ஐ விருப்பங்கள் முறையே ரூ.21,650 மற்றும் ரூ.24,150 முதல் தொடங்குகின்றன. இதோடு தகுதியான டிவைஸ்களுக்கு ரூ. 64,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆபரும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
iPhone 14 To Available to Buy Under Rs 40000 in Flipkart Big Billion Days Sale 2025 Starts Sep 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X