Home
Mobile

செம்ம டிமாண்ட் ஆகும் iPhone.. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலைக்கு விற்பனை.. எந்த மாடல்?

ஐபோன் 15 சீரிஸ்-க்கு முன்பாக வந்த மாடல் ஆக.. அதாவது கொஞ்சம் பழைய ஐபோன் மாடலாக இருந்தாலும் பராவாயில்லை.. கம்மி விலையில் ஒரு நல்ல ஐபோன் மாடலை வாங்கினால் போதும் என்கிற ஆசை அல்லது ஆர்வம் கொண்ட வடிக்கையார்கள்.. நேராக விஜய் சேல்ஸ்-க்கு செல்லவும்!

வருகிற 2025 செப்டம்பர் மாதம் ஆப்பிளின் அடுத்த ஐபோன் மாடல்களாக ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான ஐபோன் 14 மாடல் ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலை குறைப்பை பெற்று, விஜய் சேல்ஸ் வழியாக அபாரமான தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

செம்ம டிமாண்ட் ஆகும் iPhone.. கிட்டத்தட்ட பாதி விலைக்கு விற்பனை!

தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் 14 மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,500 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று என்று விஜய் சேல்ஸ் அறிவித்து உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் மற்றும் இஎம்ஐ சலுகைகளும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேல்ஸ் தற்போது, ஐபோன் 14 மாடலின் பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.51,900 க்கு பட்டியலிட்டுள்ளது. இது ரூ.59,900 இலிருந்து ஏற்கனவே ரூ.8000 விலை குறைப்பை பெற்றுள்ளது. ஐபோன் 14 மாடலின் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.54,900 மற்றும் ரூ.64,900 க்கு கிடைக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடததக்கது.

ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் அல்லது எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி ஐபோன் 14 மடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விஜய் சேல்ஸ் ஆனது ரூ.1,000 தள்ளுபடியை வழங்குகிறது. இது ஐபோன் 14 மாடலின் தொடக்க விலையை ரூ.49,900 ஆக குறைக்கும். இருப்பினும் எச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் வாங்குபவர்கள் ஃபுல் ஸ்வைப் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.3,500 வரை உடனடி தள்ளுபடியை பெறலாம்.

ஐபோன் 14 மாடலுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன்கள் மாதத்திற்கு ரூ. 8,332 முதல் தொடங்குகின்றன. அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் இஎம்ஐ விருப்பங்கள் மாதத்திற்கு ரூ.2,496 முதல் தொடங்குகின்றன. ரூ.59,900 என்கிற பட்டியலிடப்பட்டுள்ள விலை ஒருபக்கம் இருக்க உண்மையில் ஐபோன் 14 மாடல் ஆனது செப்டம்பர் 2022 இல் ரூ.79,900 என்கிற தொடக்க விலையில் அறிமுகமானது

பின்னர் ஐபோன் 15 சீரீஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் விலையை ரூ.69,900 ஆக குறைத்தது. பின்னர் ஐபோன் 16இ (iPhone 16e) அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 மாடலை அதன் வலைத்தளம் வழியாக விற்பனை செய்வதை நிறுத்தியது. தற்போது இது அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் முறையே ரூ.61,499 மற்றும் ரூ. 52,990 என்கிற தொடக்க விலையில் வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 14 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே
- ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்
- 512ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 12 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள்
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ட்ரூடெப்த் கேமரா வழியாக ஃபேஸ் ஐடி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் டைம்

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 Selling At All Time Low Price in Vijay Sales Ahead iPhone 17 Launch in Sep 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X