iPhone 14 Pro மீது அடேங்கப்பா ஆஃபர்.. இதை விட கம்மி விலைக்கு இதுக்கு முன்னாடி விற்கப்பட்டதே இல்ல!
லேட்டஸ்ட் ஐபோன்களில் ஒன்றான ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மாடலை, மிகவும் மலிவான விலைக்கு வாங்குவதற்கு இதைவிட ஒரு 'சூப்பர் சான்ஸ்' கிடைக்காது என்று கூறும்படியாக, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) அதன் மீது பலவகையான சலுகைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 சீரிஸ் (Apple iPhone 15 Series) ஆனது வருகிற செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், மற்ற ஐபோன் மாடல்களின் மீது (அதாவது ஐபோன் 14 சீரீஸ், ஐபோன் 13 சீரீஸ் மீது) திடீரென பெரும் சலுகைகள் அறிவிக்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அப்படியான ஒரு ஆஃபருக்கு நீங்கள் காத்திருந்தால், ஐபோன் 14 ப்ரோவை வாங்க இதுவே சரியான நேரம். பிளிப்கார்ட் வழியாக, ஐபோன் 14 ப்ரோ மீது கிடைக்கும் ஃபிளாட் ஆஃபர் (Flat Offer), பேங்க் ஆஃபர் (Bank Offer) மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை (Exchange Offer) பயன்படுத்தும் பட்சத்தில், முன்னெப்போதும் கிடைக்காத விலைக்கு ஐபோன் 14 ப்ரோ மாடலை வாங்க முடியும்.
ஐபோன் 14 ப்ரோ மீதான ஃபிளாட் ஆஃபர்: பிளிப்கார்ட் வலைத்தளமானது, 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 14 ப்ரோ மீது 7% ஃபிளாட் ஆஃபரை வழங்குகிறது. அதாவது இது ரூ.1,29,900 க்கு பதிலாக ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக இந்த ஆஃபர் ஐபோன் 14 ப்ரோவின் 4 கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
ஐபோன் 14 ப்ரோ மீதான பேங்க் ஆஃபர்: ஐபோன் 14 ப்ரோவை வாங்கும்போது, எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை (HDFC Credit Card) பயன்படுத்தினால் ரூ.3000 தள்ளுபடியும், எச்டிஎப்சி வங்கி டெபிட் கார்டு இஎம்ஐ-ஐ (HDFC Debit Card EMI) பயன்படுத்தினால் ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கும். ஒருவேளை பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட்டில் 5% கேஷ்பேக்கும் கிடைக்கிறது.
ஐபோன் 14 ப்ரோ மீதான எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்: எக்ஸ்சேஞ்ச் சலுகையை பொறுத்தவரை, அதிகபட்சமாக ரூ.35000 வரை எக்ஸ்சேன்ஜ் வேல்யூவை பெறலாம். இதற்காக (நல்ல நிலையில் உள்ள) உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்யவேண்டியது இருக்கும். மேலும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூவானது முழுக்க-முழுக்க உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்து வேறுபடும்.
ஐபோன் 14 ப்ரோவின் முக்கிய அம்சங்கள்: ஐபோன் 14 ப்ரோ மாடலானது 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, 12எம்பி செல்பீ கேமரா, 48எம்பி மெயின் கேமராவுடன் இரண்டு 12 எம்பி லென்ஸ்கள் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், ஆப்பிளின் சொந்த ஏ16 பயோனிக் சிப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
ஐபோன் 13 மீதான ஆஃபர்: ஒருவேளை நீங்கள் ஐபோன் 13 மாடலை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் வழியாக அதன் மீதும் நல்ல சலுகைகள் கிடைக்கிறது. தற்போது இது 16% பிளாட் ஆஃபரின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.58,499 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 13 மீதும் பிரத்யேக வங்கி சலுகைகள் அணுக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








