ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சுவாரஸ்யம்- இந்த டுவிஸ்ட் உடன் வெளியாகும் iPhone 14 Pro?

|

செப்டம்பர் 7 ஆம் தேதி ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகமாக இருக்கும் நிலையில், இந்த சாதனம் குறித்த தகவல் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளது. அதன்படியான ஒரு தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max கேரமாக்கள்

iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max கேரமாக்கள்

ஐபோன் 14 இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகமாக இருக்கிறது. இந்த சாதனம் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ண இருக்கிறது.

அதன்படி iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max உடன் ஒப்பிடும்போது iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max கேரமாக்கள் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராக்களை கொண்டிருக்கும் என Ming-Chi Kuo கூறியுள்ளார்.

இதன் ப்ரோ மாடல்கள் அதன் முன்னோடிகளுடன் ஒப்பிடும் போது அதிக சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கும் எனவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட கேமரா சென்சார்கள்

மேம்பட்ட கேமரா சென்சார்கள்

இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அல்ட்ரா வைட் கேமராக்களை கொண்டிருக்கும் என Ming-Chi Kuo குறிப்பிட்டுள்ளார்.

இரண்டும் 1.4μm அளவு இமேஜ் சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய சாதனங்கள் 1.0µm சென்சாரைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

30W சார்ஜிங் ஆதரவு

30W சார்ஜிங் ஆதரவு

இமேஜ் சென்சார் (CIS), வாய்ஸ் கண்ட்ரோல் மோட்டார் (VCM), மற்றும் காம்பாக்ட் கேமரா தொகுதி (CCM) என பல மேம்பட்ட ஆதரவுகளை இந்த புதிய ஐபோன் மாடல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் 14 இல் அல்ட்ரா வைட் கேமராக்கள் இடம்பெறும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் 30W சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

ஐபோன் 14 குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்

ஐபோன் 14 குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்

ஐபோன் 14 செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என ஏரத்தாள முடிவு செய்யப்பட்டுவிட்டது. செப்டம்பர் 7 ஆம் தேதி ஆப்பிள் அறிமுக நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து போஸ்டர் வெளியானது.

அதில் far out என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது "தொலைவில்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் ஒரு டுவிஸ்ட்-ம் உள்ளது. தகவலை சற்று விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 14 சீரிஸ் செப்டம்பர் 7 அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஐபோன் மாடல் நேரடியாக சாட்டிலைட் இணைப்பை பெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

செயற்கைக்கோள் இணைப்பு விருப்பம்

செயற்கைக்கோள் இணைப்பு விருப்பம்

ஐபோன் 14 சீரிஸ் செயற்கைக்கோள் இணைப்பு விருப்பத்தை வழங்கக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளை பயன்படுத்தி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலைக் கொண்டு செல்லலாம்.

செல்லுலார் இணைப்பு இல்லாத பகுதிகளில் செயற்கைக்கோள் இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தொலைத் தொடர்பு இணைப்பு எப்படி இருக்கும்?

தொலைத் தொடர்பு இணைப்பு எப்படி இருக்கும்?

பிரபல ஆப்பிள் ஆய்வாளரும், பத்திரிக்கையாளருமான மார்க் குர்மன் இந்த நுட்பம் குறித்து முன்னதாகவே தெரிவித்தார்.

இவர் வெளியிட்ட தகவலில் வாட்ச் ப்ரோ சாதனமும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன்களில் செயற்கைக்கோள் நுட்பத்தை இணைக்க சிறப்பு மோடம் சிப் உட்பொதிக்க வேண்டும் என குர்மன் குறிப்பிட்டார்.

இதுபோன்ற செயற்கைக்கோள் நுட்பத்துடன் வரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் எக்ஸ் இன் செயற்கைக்கோளுடன் இணைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நுட்பங்கள் எதிர்காலத்தில் தொலைத் தொடர்பு இணைப்பு எப்படி இருக்கும் என்பதை குறிக்கிறது.

கூடுதல் மேம்பாட்டு அம்சங்கள்

கூடுதல் மேம்பாட்டு அம்சங்கள்

அதேபோல் வரவிருக்கும் ஐபோன் 14 சாதனத்தின் செல்பி கேமரா கூடுதல் மேம்பாட்டு அம்சங்களை கொண்டிருக்கும் என பிரபல ஆப்பிள் ஆய்வாளர் Ming-Chi Kuo முன்னதாகவே குறிப்பிட்டார்.

ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் சாதனத்தின் முன்பக்க கேமராவிற்கு என எல்ஜி இன்னோடெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆட்டோஃபோகஸ் தன்மை

இதையடுத்து ஐபோன் 14 முன்புற கேமராவின் மேம்பாடு என்பது இதுவரை கண்டிறாத வகையில் இருக்கும் எனவும் இந்த சாதனத்தின் முன்பக்க கேமராவானது ஆட்டோஃபோகஸ் தன்மையை ஆதரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
iPhone 14 Pro, Iphone 14 Pro Max Might be Launching with Ultra Wide Cameras, 30W Charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X