ஒரே ஒரு அப்டேட் 1.50 லட்ச ரூபாய் ஐபோன் காலி.! அடுத்தடுத்து பாதிக்கும் iPhone-கள்.. என்னாச்சு?
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாதனம் தான் ஐபோன் 14 சீரிஸ் (iPhone 14 series) வரிசை. இந்த வரிசையில், ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 plus), ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 pro), ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 pro max) ஆகிய 4 மாடல்களை கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட 1.50 லட்சம் செலவு செய்து ஒரு புது ஐபோனை வாங்கிய தீவிரமான ஆப்பிள் ரசிகர்கள் இந்தியாவில் ஏராளம். அதிக டிமாண்ட் காரணமாக நிறுவனம் இன்னும் அதிகமான ஐபோன் 14 ப்ரோ மாடலக்ளை தயாரித்து வருகிறது. இப்படி லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து வாங்கிய புதிய ஐபோனில் சில மாதங்களிலேயே கோளாறு ஏற்பட்டால் அவர்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன் அப்டேட் ஆனா iOS 16 ஐ இன்ஸ்டால் செய்தவர்களின் ஆப்பிள் ஐபோன் டிஸ்பிளேவில் ஹாரிசாண்டல் க்ளிட்ச் (iPhone horizontal line glitch) இடம் பெற்றுள்ளது. பல ஐபோன் பயனர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.சமூக ஊடக தளங்களில், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் சில பயனர்கள் தங்கள் சாதனங்களை எந்த வெளிப்படையான காரணமோ அல்லது தீர்வோ இல்லாமல் வேக் அப் (iPhone wake up) செய்யும் போது ஹரிசாண்டல் கோடுகள் திரை முழுவதும் ஒளிருகிறது என்று புகார் அளித்துள்ளனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட கலந்துரையாடல் தளமான Reddit இல் "1LastOutlaw" என்ற பயனர் தனது புத்தம் புதிய iPhone 14 Pro Max இல் ஏற்பட்ட கோளாறைக் கவனித்ததாகப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், பயனரின் கூற்றுப்படி, சிக்கல் தோராயமாக எழுகிறது. ஒவ்வொரு முறையும் ஐபோன் திரையை வேக் அப் செய்யும் போது இந்த கோளாறு (iPhone display error) காண்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் டிஸ்ப்ளேகளில் இந்த கோளாறு அதிகமாகக் காணப்படுவதாக MacRumors தெரிவித்துள்ளது.
வெளியான தகவலின் படி, ஐபோன் 14 ப்ரோ இயக்கப்பட்டிருக்கும் போது, சிறிது நேரம் கழித்து மறைவதற்கு முன்பு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் டிஸ்பிளே முழுவதும் ஒளிரும் என்று டஜன் கணக்கான பயனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனை iOS 16 இல் உள்ள சாப்ட்வேர் பிழை (software issue) என்றும், வன்பொருள் (hardware) குறைபாடல்ல என்று Apple Support கூறியதாக அவர்கள் கூறுகின்றனர்.
சில பயனர்கள் iOS 16.2 மேம்படுத்தலுக்குப் பிறகு சிக்கல் ஏற்பட்டதாகக் கூறியதாக அறிக்கை குறிப்பிடுகிறது. மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் (twitter), தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவுப் பக்கம் ஒரு பயனருக்குப் பதிலளித்து, டிஸ்பிளே சிக்கலைச் சரிசெய்ய நிறுவனம் ஏற்கனவே தீர்வை தேடி வருகிறது என்று கூறியுள்ளார். ஆப்பிள் ஊழியர் ஒருவர் Reddit பயனரிடம் தொலைப்பேசியில் கூறியதாக, நிறுவனம் சிக்கலுக்கான மென்பொருள் தீர்வை உருவாக்குகிறது, ஆனால் இது எப்போது பயனர்களுக்குக் கிடைக்கும் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இதற்கிடையில், சமீபத்திய காலங்களில், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 13 இன் பல பயனர்கள் iOS 16 இல் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. iOS 16-க்கு அப்டேட் செய்த பிறகு பல சிக்கல்களை ஆப்பிள் ஐபோன் பயனர்கள் சந்தித்துள்ளனர். இதில் டிஸ்பிளே முடக்கம் (screen freezes), பச்சை நிற டிஸ்பிளே கோளாறு (green screens) மற்றும் ஹைலைட் சர்ச் கோளாறு (highlight searches) ஆகிய கோளாறுகள் சமீபத்தில் காணப்பட்டுள்ளன. ஸ்பாட்லைட் சர்ச் மெனுவில் (Spotlight Search menu) ஐபோன் 14 ப்ரோவின் டிஸ்பிளே உறைந்திருப்பதாக ஒரு வீடியோவில் நிரூபிக்கப்பட்டது.
இருப்பினும், பயனர் அதிலிருந்து வெளியேற அல்லது மறுதொடக்கம் செய்ய முயற்சிக்கும் போது ஐபோன் அவர்களின் கட்டளைகளுக்கு பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எழுந்து வரும் சாப்ட்வேர் சிக்கல்களை ஆப்பிள் நிறுவனம் சரி செய்து வருவதாகக் கூறியுள்ளது. ஒருவேளை உங்கள் ஐபோனிலும் நீங்கள் iOS 16 அப்டேட்டை ஏற்க விரும்பினால், கவனமாக யோசித்து முடிவு செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications