Home
Mobile

தலை சுத்த வைக்கும் தள்ளுபடி.. Flipkart-ல மொத்த iPhone 14 Plus மாடல்களும் வித்து தீரப்போகுது!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) வழியாக, தன்னிடம் இருக்கும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடலின் மொத்த ஸ்டாக்கையும் விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது.

ஏனென்றால் ஆப்பிளின் ஓராண்டு பழைய மாடலான ஐபோன் 14 பிளஸ் மீது மெகா தள்ளுபடி (Mega Offer) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் விற்பனையின் கீழ் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்களின் மீது பெரிய அளவிலான சலுகைகள், விலைக்குறைப்புகள் மற்றும் தள்ளுபடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

Flipkart-ல மொத்த iPhone 14 Plus மாடல்களும் வித்து தீரப்போகுது!

அவைகளில் ஐபோன் 14 பிளஸ் மீது கிடைக்கும் தள்ளுபடி அனைவரையும் ஈர்க்கும்படி உள்ளது. ஐபோன் 15 சீரிஸின் (iPhone 15 Series) வெளியீட்டிற்கு ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டுமே விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. இந்நிலைப்பாட்டில் தான் பிளிப்கார்ட் வலைத்தளம் ஐபோன் 14 பிளஸ் மீதான மெகா தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஐபோன் 14 பிளஸ் பழைய விலை VS புதிய விலை: நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 பிளஸ் மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (Basic Storage Option) இந்தியாவில் ரூ.89,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஐபோன் 15 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆப்பிள் இந்த மாடலின் மீது ரூ.10,000 விலைக்குறைப்பை (Price Cut) அறிவித்தது.

Flipkart-ல மொத்த iPhone 14 Plus மாடல்களும் வித்து தீரப்போகுது!

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளமானது, ஐபோன் 14 பிளஸ் மாடலை ரூ.35,250 தள்ளுபடிக்கு பிறகு வெறும் ரூ.31,749க்கு வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது. டிசம்பர் 16 ஆம் தேதியோடு முடிவடையும் 2023 பிக் இயர் எண்ட் சேலின் ஒரு பகுதியாக ஐபோன் 14 பிளஸ் மீது ரூ.12,901 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் ஐபோன் 14 பிளஸின் ஆரம்ப விலை ரூ.66,999 ஆக குறைத்துள்ளது.

இது தவிர்த்து எச்டிஎச்பி பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ ( HDFC Bank Credit Card EMI) விருப்பத்தின் கீழ் 9 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்தை தேர்வு செய்தால் உங்களுக்கு ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 14 பிளஸின் விலையை ரூ.66,249 ஆக குறைக்க முடியும்.

Flipkart-ல மொத்த iPhone 14 Plus மாடல்களும் வித்து தீரப்போகுது!

கடைசியாக உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.34,500 வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியையும் (Exchange Offer) பிளிப்கார்ட் வழங்குகிறது. மேற்கண்ட அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளையும் சரியாக பயன்படுத்தினால் ஐபோன் 14 பிளஸின் இறுதி ஆபர் விலையை (Final Offer Price) ரூ.31,749 க்கு கொண்டுவர முடியும்.

ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்: இது 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை (Super Retina XDR display) கொண்டுள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ (iPhone 13 Pro) மாடல்களில் காணப்படுவது போல் இது மேம்படுத்தப்பட்ட ஏ15 பயோனிக் சிப் (A15 Bionic Chip) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலானது 12எம்பி மெயின் கேமரா (12MP Main Camera) மற்றும் 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா (12MP Ultra Wide Camera) என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமரா (12MP Selfie Camera) உள்ளது. அதாவது இதன் அனைத்து கேமராக்களும் 12 மெகாபிக்சல் கேமராக்கள் ஆகும்.

ஐபோன் 14 பிளஸ் மாடலானது 5ஜி ஆதரவுடன் (5G Support) வருகிறது மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை நீடிக்கும். கடைசியாக இது 5 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது: ப்ளூ, பர்பிள், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ப்ராடெக்ட் (ரெட்).

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 Plus Mega Discount Offer Flipkart Big Year End Sale December 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X