Home
Mobile

அடிச்சது அதிர்ஷ்டம்.. iPhone 16e வந்த ராசி.. iPhone 14, 15, 16 மீது கிட்டத்தட்ட ரூ.10,000 வரை டிஸ்கவுண்ட்!

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரீஸின் கீழ் புதிய ஐபோன் 16இ (iPhone 16e) மாடலை அறிமுகம் செய்த வேகத்தில், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில், ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 16 (iPhone 16) ஆகிய மாடல்கள் டிஸ்கவுண்ட் விலைகளில் வாங்க கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 14: தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் அதன் அசல் விலையான ரூ.59,900 க்கு பதிலாக 9% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.53,999 க்கு வாங்க கிடைக்கிறது.

iPhone 16e வந்த ராசி.. iPhone 14, 15, 16 மீது டிஸ்கவுண்ட்!

ஆப்பிள் ஐபோன் 15: தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் அதன் அசல் விலையான ரூ.69,900 க்கு பதிலாக 7% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 16: தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் அதன் அசல் விலையான ரூ.79,900 க்கு பதிலாக 12% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 16இ விலை விவரங்கள்: இந்தியாவில் ஐபோன் 16இ மாடல் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.59,900
256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.69,900
ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.89,900

ஆப்பிள் ஐபோன் 16இ முன்பதிவு மற்றும் விற்பனை விவரங்கள்: மேற்கண்ட 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே நாளை முதல், அதாவது பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய கிடைக்கும். பின்னர் ஐபோன் 16இ மாடலின் விற்பனை 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த மாடல் பிளாக் அல்லது ஒயிட் ஆகிய 2 கலர்களில் மட்டுமே வாங்க கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 16இ மாடலின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஐபோன் 16இ மாடலில் பாரம்பரியமான ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஆக்ஷன் பட்டன் சேர்க்கப்பட்டுள்ளது. கூடவே ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஆப்பிள் ஏ18 சிப்பில் 6-கோர் சிபியு உள்ளது, இது ஐபோன் 11 மாடலில் உள்ள ஏ13 பயோனிக் சிப்பை விட 80 சதவிகிதம் வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது. மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிளின் கூற்றுப்படி, நியூரல் என்ஜின் ஏ13 -ஐ விட இது ஆறு மடங்கு வேகமாக ஏஐ மாடல்களை செயலாக்க முடியும். ஒட்டுமொத்தமாக இது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும். எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது.

ஐபோன் 16இ மாடலின் கேமராக்களை பௌத்தவாரை இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது.

ஐபோன் 16இ மாடலின் பேட்டரியை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் க்ராஷ் டிடெக்ஷனும் உள்ளது - இது கடுமையான விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 iPhone 15 iPhone 16 Gets Discount in Flipkart Ahead iPhone 16e Pre Order Starts Feb 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X