Home
Mobile

இவ்ளோ கம்மி விலைக்கு விற்கப்பட்டதே இல்ல.. Flipkart-க்கு கும்பிடு போட்டு.. ஆளுக்கொரு iPhone 14 ஆர்டர் போடுங்க!

அறிமுகமான நாளில் இருந்து இவ்வளவு குறைவான விலைக்கு விற்கப்பட்டதே இல்லை என்கிற அளவிற்கு ஐபோன் 14 (iPhone 14) மீது பிளிப்கார்ட்டின் பல வகையான ஆஃபர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மேலும் இச்சலுகைகள் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நினைவூட்டும் வண்ணம், கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2023 விற்பனையானது வருகிற மார்ச் 15 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த சிறப்பு விற்பனையின் போது பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் மீது ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஐபோன் 14 மீது அறிவிக்கப்பட்டுள்ள ஆஃபர்கள் பலரது ஆர்வத்தையும் தூண்டுவது போல் உள்ளது.

Flipkart Sale 2023: இவ்ளோ கம்மி விலைக்கு iPhone 14 விற்கப்பட்டதே இல்ல!

ஐபோன் 14 அசல் விலையும், பிளிப்கார்ட்டின் ஆஃபர் விலையும்!

128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 14 பேஸிக் வேரியண்ட்டின் அசல் விலை ரூ.79,900. ஆனால் இது பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது ரூ.66,999 என்கிற தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். அதாவது ஐபோன் 14 மீது ரூ.12,901 தள்ளுபடி கிடைக்கும். இதேபோல் 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.76,999 க்கும், 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.96,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஐபோன் 14 மீதான பிளிப்கார்ட்டின் நேரடி தள்ளுபடியோடு (Flat Discount) சேர்த்து, பிளிப்கார்ட் வழியாக அணுக கிடைக்கும் வங்கி சலுகைகள் (Bank Offers) மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை (Exchange Offer) பயன்படுத்தும் பட்சத்தில், உங்களால் ஆப்பிள் ஐபோன் 14-இன் விலையை இன்னும் கடுமையாக குறைக்க முடியும்.

ஐபோன் 14 மீது கிடைக்கும் வங்கி சலுகைகள்

நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் (ICICI Bank Credit) கார்டு மற்றும் ஐசிசிஐசி வங்கியின் கிரெடிட் கார்டு ஈஎம்ஐ பரிவர்த்தனைகளின் வழியாக ஐபோன் 14-ஐ வாங்கினால் 10% கேஷ்பேக் (ரூ.750 வரையிலான) கிடைக்கும். அதுவே பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் (Flipkart Axis Bank) கார்டுகளை பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் கிடைக்கும்.

ஐபோன் 14 மீது கிடைக்கும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்

நேரடி தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை தவிர்த்து ஐபோன் 14 மீது ஒரு அற்புதமான எக்ஸ்சேன்ஜ் ஆஃபரும் அணுக கிடைக்கிறது. இதன் கீழ் உங்களுக்கு ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். அதாவது மேற்கண்ட தள்ளுபடி மற்றும் சலுகைகளை பயன்படுத்திய பிறகு இருக்கும் ஐபோன் 14-இன் விலையில் ரூ.20,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.

ஆஃபர் விலையில் கிடைக்கும் ஐபோன் 14 மாடலை நம்பி வாங்கலாமா?

பார்ப்பதற்கு ஐபோன் 13-ஐ போலவே தோன்றினாலும் கூட ஐபோன் 14 மாடலானது பல வகையான மேம்பாடுகளுடன் வருகிறது. ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் மாடல் மேம்படுத்தப்பட்ட பேட்டரி லைஃப் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமராக்களுடன் வருகிறது. மேலும் இது ஆப்பிளின் சொந்த ஏ15 பயோனிக் சிப்செட் (Apple A15 Bionic Chipset) மூலம் இயக்கப்படுகிறது.

ஐபோன் 14 யெல்லோ கலர் வேரியண்ட்

நினைவூட்டும் வண்ணம், கடந்த வாரம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸின் புதிய யெல்லோ கலர் வேரியண்ட் (Yellow Colour Variant) இந்தியாவில் அறிமுகமானது. கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் முன்பதிவு (Pre-order) செய்ய கிடைக்கும் இந்த புதிய மஞ்சள் நிற ஐபோன் 14 மாடல்களானது வருகிற மார்ச் 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 Available at Very Cheap Price On Flipkart Big Saving Days 2023 Sale Until March 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X