அசல் விலையை விட கம்மியாக.. ஆஃபர் விலையில் iPhone 14, iPhone 14 Plus யெல்லோ வேரியண்ட்-ஐ வாங்குவது எப்படி?
கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல்களின் புதிய யெல்லோ கலர் வேரியண்ட்டின் (Yellow Colour Variant) அசல் விலை நிர்ணயம் என்ன? இந்த 2 மாடல்களையும் ஆஃபர் விலையில் வாங்குவது எப்படி? இதோ விவரங்கள்:
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டுமே மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைத்தது. தற்போது 6-வதாக மஞ்சள் நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 10 முதல் முன்பதிவு (Pre-order) செய்ய கிடைக்கும் இந்த "புதிய" ஐபோன்கள் மார்ச் 14 முதல் விற்பனைக்கும் வர உள்ளன.

ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் வாங்குவது எப்படி?
கடந்த மார்ச் 7 ஆம் தேதி அறிமுகமான ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸின் புதிய யெல்லோ கலர் வேரியண்ட் ஆனது ஆப்பிள் இந்தியா (Apple India) வலைத்தளம், பிரபல இ-காமர்ஸ் வலைதளங்களான அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கும்.
ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் விலை விவரம்
ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தின் படி, ஐபோன் 14 யெல்லோ கலர் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ. 79,990, மறுகையில் உள்ள ஐபோன் 14 பிளஸ் யெல்லோ வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ. 89,990. ஆனால் இந்த இரண்டையுமே ஆஃபர் விலையின் கீழ் வாங்க முடியும். அதற்கு நீங்கள் இந்த 2 ஐபோன்களையும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களில் ஒன்றான ரெடிங்டன் இந்தியா (Redington India) வழியாக வாங்க வேண்டும்.
ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் சலுகைகள்
ரெடிங்டன் இந்தியாவானது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸின் யெல்லோ கலர் வேரியண்ட்டை பல வகையான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. அதில் ரூ.15,000 என்கிற ஸ்டோர் டிஸ்கவுண்ட்டும் (Store Discount) அடங்கும். இது தவிர உடனடி கேஷ்பேக் (Instant Cashback) மற்றும் எக்ஸ்சேன்ஞ் ஆஃபரும் (Exchange Offer) போன்றவைகளும் கிடைக்கும்.
ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்
யெல்லோ கலர் வேரியண்ட் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸின் அம்சங்களுக்கும் மற்ற கலர் ஆப்ஷன்களின் அம்சங்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஐபோன் 14 மாடலானது அதே 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே, ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட், ஐஓஎஸ் 16 அவுட் ஆஃப் பாக்ஸ், 12எம்பி டூயல் ரியர் கேமரா, 12எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள ஐபோன் 14 பிளஸ் மாடலானது 6.7 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதுவும் ஐபோன் 14-ஐ போலவே ஐஓஎஸ் 16 மற்றும் ஆப்பிளின் சொந்த ஏ15 பயோனிக் சிப்செட் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது ஐபோன் 14-இல் உள்ள அதே சென்சார்களையே பேக் செய்கிறது. அதாவது 12எம்பி + 12எம்பி ரியர் கேமரா செட்டப் மற்றும் 12எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








