Home
Mobile

சர்ர்னு.. சரிந்து போன iPhone 14 விலை.. இனிமே iPhone 13 பக்கம் ஒருத்தரும் போக மாட்டாங்க போலயே!

2023 ஐபோன் மாடல்கள், அதாவது ஐபோன் 15 (iPhone 15) சீரீஸ் அறிமுகமான இன்னும் பல மாதங்கள் உள்ளன. அவ்வளவு நாட்கள் காத்திருக்க முடியாது; லேட்டஸ்ட் ஐபோன் ஒன்றை வாங்கும் ஆசையை கட்டுப்படுத்த முடியாதென்றால்.. ஐபோன் 14 (iPhone 14) மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அபார சலுகை உங்களுக்கானது தான்!

ஐபோன் 14 சீரீஸில் உள்ள வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 14, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக மிகவும் கவர்ச்சிகரமான சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக மட்டுமே கிடைக்கும் பிரத்யேக சலுகை என்பதையும் நினைவில் கொள்ளவும்.

Flipkart-இல் சர்ர்னு.. சரிந்து போன iPhone 14 விலை!

அதாவது இமேஜின் (Imagine), ஐடச் (iTouch) போன்ற ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ரீடெயில் விற்பனையாளர்களிடம் இந்த சலுகை கிடைக்காது என்று அர்த்தம். பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 14 மீது ரூ.15,000 தள்ளுபடியை வழங்குகிறது. ஐபோன் 14 போன்ற சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.15,000 ஆஃபர் கிடைப்பது உண்மையியே ஒரு பெரிய தள்ளுபடி தான்.

பிளிப்கார்ட்டின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினால், உங்களால் ஐபோன் 14-இன் 128 ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.64,999 க்கு வாங்க முடியும் (நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 128ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ,79,900 ஆகும்). முதலில் பிளிப்கார்ட்டின் ரூ.11,000 தள்ளுபடியை பெற வேண்டும்.

பின்னர் எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு (HDFC Bank Credit and Debit) வழியாக ஐபோன் 14-ஐ வாங்கும் பட்சத்தில் கிடைக்கும் ரூ.4000 தள்ளுபடியை பெற வேண்டும்; இதுவொரு உடனடி தள்ளுபடியாகும் (Instant Discount), இது ஆப்பிள் ஐபோன் 14-இன் விலையை ரூ.64,999 ஆக குறைக்கும்.

இந்த சலுகையில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஐபோன் 14-இன் ப்ராடக்ட் ரெட் (Product Red) வேரியண்ட் மீது மட்டும் தான் இந்த சலுகை கிடைக்கும்; ஐபோன் 14-இன் மற்ற கலர் ஆப்ஷன்கள் பிளிப்கார்ட்டில் ரூ.71,999 முதல் விற்பனை செய்யப்படுகின்றன,

ஐபோன் 13 மீதும் ஆஃபர் கிடைக்கிறது! ஒருவேளை சலுகை விலையிலும் கூட ஐபோன் 14 மாடலானது உங்கள் பட்ஜெட்டிற்குள் வரவில்லை என்றால்.. சற்றே பழைய ஐபோன் 13-ஐ கருத்தில் கொள்ளவும். தற்போது இது பிளிப்கார்ட்டில் ரூ.61,999 க்கு வாங்க கிடைக்கிறது. உங்களிடம் எச்டிஎப்சி பேங்க் கார்டு இருந்தால், கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியை பெறலாம்.

ஐபோன் 14 முக்கிய அம்சங்கள்: இது 6.06-இன்ச் டிஸ்பிளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12 எம்பி செல்பீ கேமரா, 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி என்கிற 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ், ஆப்பிள் ஐஓஎஸ் 16 போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஐபோன் 13 முக்கிய அம்சங்கள்: இது 6.10-இன்ச் டிஸ்பிளே, அதே ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12 எம்பி செல்பீ கேமரா, 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், அதே 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி என்கிற 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ், ஆப்பிள் ஐஓஎஸ் 15 போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 14 128GB Product Red Variant gets Rs 15000 Offer On Flipkart Check Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X