Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.40,901 விலை கட்.. அடிமட்ட ரேட்டில் iPhone.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

அடிமட்ட விலைக்கு ஐபோன் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) சரியான நேரம் வந்துவிட்டது. செராமிக் ஷீல்டு புரொடெக்சன் கொண்ட சூப்பர் ரெடினா டிஸ்பிளே, நியூரல் என்ஜின் கொண்ட பயோனிக் ஏ15 சிப்செட், சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 எம்பி கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ஐபோன் 13 (iPhone 13) வந்து இருக்கிறது.

இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது, பிரைம் அல்லாத கஸ்டமர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஐபோன்களுக்கு இதுவரையில் கிடைக்காத பேங்க் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் வாரி வழங்கப்பட இருக்கின்றன. ஐபோன் 13 மாடல் ஒட்டுமொத்த கவனத்தையும் தட்டித் தூக்கி இருக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.40,901 விலை கட்.. அடிமட்ட ரேட்டில் iPhone!

ஐபோன் 13 அம்சங்கள் (iPhone 13 Specifications): இந்த மாடலானது 3 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தாலும், ஐபோன்களில் மலிவான விலைக்கு அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது. 6.1 இன்ச் (2532 × 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடல் டிஸ்பிளேவாகும்.460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் (HDR) மற்றும் ட்ரூ டோன் (True Tone) பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு செராமிக் ஷீல்டு புரொடெக்சன் (Ceramic Shield Protection) வருகிறது. ஐஓஎஸ் 15 (iOS 15) கொண்ட சிக்ஸ்-கோர் பயோனிக் ஏ15 5என்எம் (Six-Core Bionic A15 5nm) சிப்செட் வருகிறது. 4 கோர் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) வருகிறது.

இந்த ஐபோன் 13 போனில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. கேமராவில் கிட்டத்தட்ட அனைத்து பிரீமியம் பீச்சர்களும் பேக் செய்யப்பட்டுள்ளன. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 4K எச்டிஆர் (HDR) வீடியோ ரெக்கார்டிங் கொண்ட சினிமாடிக் மோட் (Cinematic Mode) வருகிறது. ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) பேக் செய்யப்பட்டுள்ளது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.40,901 விலை கட்.. அடிமட்ட ரேட்டில் iPhone!

12 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு செகண்டரி கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-shift Optical Image Stabilisation) உள்ளது. 1080p ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் மற்றும் 4K ரெக்கார்டிங் வருகிறது. அதேபோல ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) கொண்ட 12எம்பி ட்ரூடெப்த் செல்பீ வருகிறது.

இந்த கேமராவிலும் 4K எச்டிஆர் ரெக்கார்டிங், 1080p ஸ்லோவ் மோஷன் மற்றும் டால்பி விஷன் உள்ளது. 7.65 எம்எம் தடிமன் மற்றும் 173 கிராம் எடை வருகிறது. ஐபோன்களில் வழக்கமாக கொடுக்கப்படும் மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. 19 மணி நேரங்களுக்கு வீடியோ பேக்கப் கொடுக்கும்.

இந்த ஐபோன் 13 போனின் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.79,900ஆக இருந்தது. ஆனால், இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.41,999 பட்ஜெட்டில் வருகிறது. இந்த விலையிலும் பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.38,999 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிங்க் (Pink), ப்ளூ (Blue), மிட்நைட் (Midnight), ஸ்டார்லைட் (Starlight) மற்றும் ரெட் (RED) கலர்கள் உள்ளன.

Best Mobiles in India

English summary
iPhone 13 With 128GB Storage Gets Discount Amazon Great Indian Festival Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X