Home
Mobile

ஆட்டத்தை ஆரம்பித்த Amazon Sale.. இவ்ளோ சீப் ஆன விலைக்கு iPhone 13-ஐ விற்கும்னு நினைச்சு கூட பார்க்கல!

iPhone 13 Amazon Sale: ப்ரைம் மெம்பர்களுக்கான அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது செப்டம்பர் 26 ஆம் தேதி முதலும், அனைவருக்குமான அணுகல் செப்டம்பர் 27 ஆம் தேதி முதலும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்கிற பட்டியலில், அமேசான் இந்தியா வலைதளத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளில் ஐபோன் 13 மீதான சலுகை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சற்றே பழைய ஐபோன் 13 மாடல் ஆனது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது ரூ.39,999 க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களை அறிமுகம் செய்த பிறகு, ஐபோன் 15 ப்ரோ மாடல்களோடு சேர்த்து பழைய ஐபோன் 13 மாடலையும் 'டிஸ்கன்ட்டினியூ' செய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Amazon Sale.. இவ்ளோ சீப் ஆன விலைக்கு iPhone 13-ஆ!

அதாவது ஆப்பிள் நிறுவனம் இனிமேல் ஐபோன் 13 மாடலை அதன் அதிகாரப்பூர்வ தளம் வழியாக விற்காது என்று அர்த்தம். ஆனால் ஸ்டாக் தீர்ந்துபோகும் வரை ஐபோன் 13 மாடலானது பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் போர்டல்களின் வழியாக விற்பனை செய்யப்படும். தற்போது இது ரூ.47,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் செப்.26 தொடங்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும்.

பழைய ஐபோன் 13 மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? 3 ஆண்டுகள் பழைய மாடலாக இருந்தாலும் கூட ஐபோன் 13 ஆனது (பல வழிகளில்) இன்னமும் ஒரு ஸ்பெஷல் மாடலாக திகழ்கிறது. ஐபோன் 12 மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக வந்த

ஐபோன் 13 ஆனது சிறிய நாட்ச், புதிய சிப், மேம்படுத்தப்பட்ட பேட்டரி லைஃப் மற்றும் குறுக்காக அடுக்கப்பட்ட டூயல் கேமரா செட்டப் உட்பட குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வந்தது. இது 6.1 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் இது ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. இது வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ஐபோன் 13 மாடலின் ப்ரைமரி 12எம்பி கேமராவானது டால்பி விஷன் பார்மெட்டில் 4கே வீடியோக்களை 60fps இல் படமாக்கும் திறனை கொண்டுள்ளது. மேலும் ஆப்பிள் தனது சினிமா மோட்-ஐ முதன்முதலில் ஐபோன் 13 மாடலில் தான் அறிமுகப்படுத்தியது. மேலும் இது வரவிருக்கும் ஐஓஎஸ் 18 அப்டேட்டிற்கு தகுதியுடையது மற்றும் அடுத்துவரும் இரண்டு பெரிய ஓஎஸ் அப்டேட்களையும் (ஐஓஎஸ் 19, ஐஓஎஸ்S 20) பெற வேண்டும்.

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 மாடல்களை போலவே இதற்கும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அணுக கிடைக்காது என்கிற ஒரேயொரு குறையை தவிர்த்து ரூ.40,000 க்கும் மலிவான விலையில் விற்பனைக்கு வரவுள்ள ஐபோன் 13 மாடலை வாங்காமல் தவிர்க்க.. வேறு எந்த காரணமும் உங்களுக்கு கிடைக்காது. 3 வருடங்கள் பழமையானதாக இருந்தாலும், பட்ஜெட் விலையில் ஐபோனை தேடும் எவருக்கும்.. ஐபோன் 11 அல்லது இன்னும் பழைய மாடலை வைத்திருக்கும் எவருக்கும்.. இதுவொரு சிறந்த அப்கிரேட் ஆக இருக்கும்.

ஆப்பிளின் புதிய ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் மாடல்களின் இந்திய விலை நிர்ணயம்:ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 16 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.99,900 மற்றும் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டுமே பிளாக், பிங்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை நிர்ணயம்: இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,19,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,29,900, ரூ.1,49,900 மற்றும் ரூ.1,69,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,44,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 512ஜிபி மற்றும் 1டிபிஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.1,64,900 மற்றும் ரூ.1,84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே பிளாக் டைட்டானியம், டெஸெர்ட் டைட்டானியம்,நேச்சுரல் டைட்டானியம் மற்றும் ஒயிட் டைட்டானியம் கலர்களில் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
iPhone 13 Will Be Available For Rs 39999 On Amazon Great Indian Festival Sale 2024 Starts Sep 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X