ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு குறித்து வெளியான புதிய தகவல்.!

|

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகின்றன, அதேசமயம் சிறந்த பாதுகாப்பு வசதியையும் வழங்குகின்றன.

ஐபோன் 13 சீரிஸ்

ஐபோன் 13 சீரிஸ்

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது, அதாவது ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதாவது சிப் உற்பத்தியில் தாமதம் ஏற்படுவதால், ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகும் என்று கூறப்பட்டு இருந்தது.

 குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதேபோல் கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் வெளியீடு சில மாதங்கள் தாமதமாகின. ஆனால் இந்த ஆண்டு ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகாது என்று தற்போது வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையே இப்படி சொல்லிட்டாரு: புதிய விதிகள் குறித்து கருத்து!கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையே இப்படி சொல்லிட்டாரு: புதிய விதிகள் குறித்து கருத்து!

ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட்

ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட்

குறிப்பாக ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சிப்செட் தான் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிப் உற்பத்தி துவங்கிவிட்ட நிலையில் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

போன் 13 தொடரின் கீழ் எத்தனைமாடல்கள்

அறிமுகத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் நிலைப்பாட்டில் கொரிய வெளியீடு ஆன ETNews வழியாக வரவிருக்கும் ஐபோன் 13 தொடரின் கீழ் எத்தனைமாடல்கள் வெளியாகும்? அதில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்? என்கிற தகவல் வெளிவந்துள்ளது.

ஐபோன் 13

வெளிவந்த தகவலின்படி, ஐபோன் 13 தொடரின் கீழ் 4 மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த 4 மாடல்களின் பெயர்களை
பொறுத்தவரை, ஐபோனி 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 4மாடல்களில் இரண்டு டாப் மாடல்களில் 120Hz OLED பேனல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 13மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தகவலின்படி, ஐபோனி 13

ETNews வெளியிட்ட தகவலின்படி, ஐபோனி 13 மினி சாதனம் ஆனது 5.4-இன்ச் 60 ஹெர்ட்ஸ் எல்டிபிஎஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவையும், ஐபோன் 13 மாடல் ஆனது 6.1-இன்ச் அளவிலான 60 ஹெர்ட்ஸ் எல்டிபிஎஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும். அதேபோல் ஐபோன் 13ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே 6.1 இன்ச் 120 ஹெர்ட்ஸ் எல்டிபிஓ ஓஎல்இடி மற்றும் 6.7-இன்ச் 120 ஹெர்ட்ஸ் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 13 தொடர் மாடல்களில் ஒஎல்

மேலும் ஐபோன் 13 தொடர் மாடல்களில் ஒஎல்இடி பேனல்கள் இடம்பெறும் என்பதை இதற்கு முன்னதாகவே TheElec வழியாக
வெளியான அறிக்கையும் சுட்டிக்காட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கிரியேட்டிவ் பிளாக் வழியாக வெளியான மற்றொரு அறிக்கையின்படி, ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் நாட்ச் அளவு குறைக்கப்படும், ஏனெனில் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவுக்கு பயன்படுத்தப்படும் சிப்பின் அளவும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கசிவுகள் (ஆன்லைனில் வெளியான தகவல்) அனைத்தும் மிகவும் ஆரம்ப கால லீக்ஸ் தகவல்கள் தான் என்பதைகுறிப்பிட விரும்புகிறோம்

Best Mobiles in India

English summary
IPhone 13 Series Release may Not Delayed: Full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X