Home
Mobile

வந்த வரை லாபம்.. Amazon VS Flipkart பஞ்சாயத்தில்.. ரூ.20,999 க்கு விற்கப்படும் பிரபல iPhone.. என்ன மாடல்?

உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கலாம், வருகிற ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் அமேசான் வலைதளத்தின் மிக முக்கியமான சிறப்பு விற்பனையான ப்ரைம் டே சேல் (Amazon Prime Day Sale) நடக்கவுள்ளது; பெயர் குறிப்பிடுவது போலவே, இது ப்ரைம் மெம்பர்களுக்கான பிரத்யேக விற்பனையாகும்.

வழக்கமாக ஒவ்வொரு அமேசான் சிறப்பு விற்பனைக்கும் போட்டியாக பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது தனது சிறப்பு விற்பனையை கட்டவிழ்த்து விடும். ஆனால் இம்முறை அப்படி எதுவும் நடக்கப்போவது போல் தெரியவில்லை. இருந்தாலும் பிளிப்கார்ட் நிறுவனத்தால் சும்மா இருக்க முடியவில்லை என்பது போலும் தெரிகிறது.

வந்த வரை லாபம்.. ரூ.20,999 க்கு விற்கப்படும் பிரபல iPhone!

ஏனென்றால் பிளிப்கார்ட் வலைத்தளமானது, அமேசான் ப்ரைம் டே விற்பனைக்கு முன்னதாகவே ஐபோன் 13 (iPhone 13) மீது "தாறுமாறான" சலுகைகளை அறிவித்துள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ரூ.79,900 க்கு அறிமுகமான ஐபோன் 13-ஐ வெறும் ரூ.20,999 க்கு கூட வாங்க முடியும். அதெப்படி என்கிற விவரங்கள் இதோ:

ஆப்பிள் ஐபோன் 13 மாடலானது அறிமுகமாகி "கிட்டத்தட்ட" இரண்டு வருடங்களை நெருங்கி விட்டாலும் கூட, சந்தையில் வாங்க கிடைக்கும் மற்ற பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு இன்னமும் ஒரு வலுவான போட்டியாளராகவே உள்ளது. ஆகையால் பிளிப்கார்ட் வலைத்தளமானது இந்த மாடலை "பெஸ்ட் செல்லர்" என்று குறிப்பிடுகிறது.

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 மாடலை வெறும் ரூ.20,999 க்கு வாங்குவது எப்படி? நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 13 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் கடந்த 2021 இல் ரூ.79,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது பிளிப்கார்ட்டில் ரூ.8,901 என்கிற நேரடி தள்ளுபடிக்கு பிறகு ரூ.60,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, நீங்கள் எச்டிஎச்பி பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி பேங்க் டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் ரூ.2,000 தள்ளுபடியை பெறலாம். இப்படியாக ஐபோன் 13-ன் விலையை ரூ.58,999 ஆக குறைக்க முடியும். கடைசியாக உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது ரூ.38,000 வரையிலான டிரேட்-இன் தள்ளுபடியை பெறலாம்.

இப்படியாக பிளிப்கார்ட்டில் கிடைக்கும் அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளையும் நீங்க; சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், ஆப்பிள் ஐபோன் 13 மாடலின் இறுதி விலையை வெறும் ரூ.20,999 ஆக குறைக்க முடியும். ஒருவேளை ரூ.20,999 க்கு வாங்க முடியவில்லை என்றாலும் கூட, முடிந்தவரை அதன் விலையை குறைக்கலாம்.

இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம். ஏனென்றால் லேட்டஸ்ட் ஐபோன் 14-க்கும் ஐபோன் 13-க்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களையே பகிர்ந்து கொள்கின்றன. ஐபோன் 13 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, ஏ15 பயோனிக் சிப்செட், 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், நைட் மோட் உடனான 12எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஜூலை 15 மற்றும் ஜூலை 16 இல் நடக்கும் ப்ரைம் டே விற்பனையின் போதும் கூட ஐபோன் 14, ஐபோன் 13 மற்றும் பிற ஐபோன்களில் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இருப்பினும் அவைகள் பிளிப்கார்ட் அளவிற்கு "தர லோக்கலுக்கு" இறங்கி வருமா என்பது சந்தேகம் தான்!

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 13 Selling At Cheapest Price Flipkart Super Offer Ahead Amazon Prime Day Sale Starts July 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X