ஐபோன் 13 ப்ரோ மாடலை அப்படியே காப்பியடித்த சீன நிறுவனம்: LeTV Y2 Pro அறிமுகம்: விலை?

|

ஆப்பிள் நிறுவனம் எப்போதுமே தரமான ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்கிறது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பை கொண்டிருக்கும்.

தனித்துவமான மென்பொருள்

தனித்துவமான மென்பொருள்

அதேபோல் தனித்துவமான மென்பொருள் வசதிகளுடன் வெளிவரும் ஐபோன்கள். எனவே தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இந்த நிறுவனத்தின்போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஐபோன் 13 ப்ரோ

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஐபோன் 13 ப்ரோ மாடலை அப்படியே காப்பியடித்து ஒரு புதிய போனை உருவாக்கியுள்ளது சீன நிறுவனம். சீன நிறுவனமான LeTV தான் LeTV Y1 Pro எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!

ஐபோன் 13 ப்ரோ

இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு அப்படியே ஐபோன் 13 ப்ரோ மாடலை போன்று உள்ளது. தற்போது இந்த புதிய போன் சீனாவில்
மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?

LeTV Y2 Pro டிஸ்பிளே

LeTV Y2 Pro டிஸ்பிளே

LeTV Y2 Pro ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஸ்பிளிட்-ஸ்கிரீன் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 1560 x 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த
புதிய போன்.

4ஜிபி/ 6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய LeTV Y2 Pro ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்

மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் Unisoc பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளது. சில நோக்கியா ஸ்மார்ட்போன்களில் இதே பிராசஸர் வசதி தான் உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் இந்த LeTV Y2 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?

கேமரா எப்படி?

கேமரா எப்படி?

ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய LeTV Y2 Pro ஸ்மார்ட்போன். அதில் 13எம்பி மெயின் கேமராவும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே ஒரு அட்டகாசமான கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஜியோ நிறுவனம் கம்மி விலையில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனில் கூட 13எம்பி கேமரா வசதி தான் உள்ளது. அதேபோல் இந்த புதிய போனும் 13எம்பி கேமராவுடன் கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2022 ஜூலை பெஸ்ட் இதுதான்- ரூ.10000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாசமான Android ஸ்மார்ட்போன்கள்.!2022 ஜூலை பெஸ்ட் இதுதான்- ரூ.10000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாசமான Android ஸ்மார்ட்போன்கள்.!

 சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

LeTV Y2 Pro ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே நீங்கள் நீண்ட நேரம் வீடியோ பார்க்கலாம். பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இல்லை என்று கூறப்படுகிறது.

மற்றபடி பேஸ் அன்லாக் மற்றும் கைரேகை சென்சார் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

நிறங்கள்

நிறங்கள்

புதிய LeTV Y2 Pro ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் ப்ளூ, மேஜிக் நைட் பிளாக் மற்றும் சம்மர் ஆரஞ்சு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான LeTV Y2 Pro ஸ்மார்ட்போன்.

திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2iதிருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2i

விலை எவ்வளவு தெரியுமா?

விலை எவ்வளவு தெரியுமா?

 • 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட LeTV Y2 Pro போனின் விலை 599 yuan (இந்திய மதிப்பில் ரூ.7,000)
 • 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட LeTV Y2 Pro மாடலின் விலை 799 yuan(இந்திய மதிப்பில் ரூ.9,500)
 • 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட LeTV Y2 Pro மாடலின் விலை 999 yuan(இந்திய மதிப்பில் ரூ.11,800)
 • Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?

  ஐபோன் 13 ப்ரோ

  ஐபோன் 13 ப்ரோ

  LeTV Y2 Pro போன் ஆனது ஐபோன் 13 ப்ரோ போன்ற வடிவமைப்புடன் குறைந்த விலையில் அறிமுகமானலும், நிச்சயமாக ஐபோன் அனுபவத்தை கொடுக்காது. ஐபோன்கள் எப்போதும் தனித்துவமான அம்சங்களுடன் அட்டகாசமான வடிவமைப்பில் வெளிவரும். அதேபோல் ஐபோன் 13 ப்ரோ மாடலின் விலை ரூ.1,19,900-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
iPhone 13 Pro-like LeTV Y2 Pro smartphone launched: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X