அட்டகாசம் பண்ணும் Apple.. விலை குறைக்கலாம். அதுக்காக இப்படியா.. iPhone 13 மீதும் மெகா விலை குறைப்பு!
எதிர்பார்க்கப்பட்டபடியே ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) அறிமுகம் செய்யப்பட்டதுமே, கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல்களின் விலைகள் அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஐபோன் 13 (iPhone 13) மாடலின் விலையும் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய ஐபோன்களின் அறிமுகத்தால் அதிகாரப்பூர்வமாக விலைக்குறைப்பை பெற்ற ஐபோன்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13-ன் பழைய மற்றும் புதிய விலைகள் இதோ:

செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த ஆப்பிளின் 'வொண்டர்லஸ்ட்' நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸின் கீழ் 4 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன: ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max).
ஒவ்வொரு ஆண்டும், தனது லேட்டஸ்ட் மாடல்களின் விற்பனைக்கு "இடமளிக்கும்" வகையில் ஆப்பிள் நிறுவனம் சில விலைகுறைப்புகளை மற்றும் சில "நிறுத்தங்களை" செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அப்படியாக ஆப்பிள் அதன் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவற்றின் விற்பனையை நிறுத்தியுள்ளது
கூடவே ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13 மாடல்களின் மீதான விலை குறைப்புகளையும் ஆப்பிள் அறிவித்துள்ளது. இந்த 3 மாடல்களுமே தற்போது ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரில் (Apple Online Store) புதிய விலைகள் கீழ் வாங்க கிடைக்கின்றன.
இருப்பினும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களில் இதே மாடல்களின் சமீபத்திய விலை, தள்ளுபடி மற்றும் சலுகைகளை சரிபார்க்கவும். ஏனென்றால் ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரை விட இ-காமர்ஸ் தளங்களில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
பழைய மாற்று, புதிய விலை நிர்ணயங்களை பொறுத்தவரை, ஐபோன் 14 இப்போது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.69,900 க்கு (128 ஜிபி) வாங்க கிடைக்கிறது. இதேபோல ஐபோன் 14 பிளஸின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கு பதிலாக ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கிறது.
இவ்விரு மாடல்களும் ப்ளூ, மிட்நைட், பர்பிள், ஸ்டார்லைட் மற்றும் (ப்ராடெக்ட்) ரெட் போன்ற கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை பொறுத்தவரை, உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்வதன் மூலம் ஐபோன் 14 சீரிஸ் மீது ரூ.67,800 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.
ஐபோன் 13 மாடலை பொறுத்தவரை,. இது அதன் அசல் விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,900 ஆக குறைக்கப்பட்டது. இது பிங்க், ப்ளூ, மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் (ப்ராடெக்ட்) ரெட் வண்ணங்களில் விற்கப்படுகிறது.
புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.79,900இல் தொடங்கி ரூ.1,99,900 வரை செல்கிறது. 128GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ரூ.79,900 க்கும், 256GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ரூ.89,900 க்கும் மற்றும் 512GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ரூ.1,09,900 க்கும் வாங்க கிடைக்கும்.
அடுத்தாக 128GB என்கிற பேஸிக் ஸ்டோரேஜுடன் உடன் வரும் ஐபோன் 15 பிளஸ் ஆனது ரூ.89,900 க்கும், 256GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 பிளஸ் ரூ.99,900 க்கும் மற்றும் 512GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 பிளஸ் ரூ.1,19,900 க்கும் வாங்க கிடைக்கும்.
இதேபோல 128GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900 க்கும், 256GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,44,900 க்கும், 512GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,64,900 க்கும் மற்றும் 1TB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,84,900 க்கும் வாங்க கிடைக்கும்.
கடைசியாக 256GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும், 512GB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,79,900 க்கும் மற்றும் 1TB ஸ்டோரேஜுடன் உடன் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,99,900 க்கும் வாங்க கிடைக்கும். அனைத்து புதிய மாடல்களின் முன்பதிவும் செப்.15 முதல் தொடங்கும்; விற்பனை செப்.22 முதல் தொடங்கும்.


Click it and Unblock the Notifications








