Home
Mobile

வாங்குறவங்க இப்போவே வாங்கிக்கோங்க.. செப்.9 க்கு பின் இந்த 4 iPhone-களும் Discontinue செய்யப்படும்.. ஏன்னா?

iPhones to Discontinued Soon: கடந்த 6 ஆண்டுகளை போலவே இந்த 2024 ஆம் ஆண்டும் கூட, ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) மாடல்களை அறிமுகம் செய்த வேகத்தில், சில பழைய ஐபோன் மாடல்களை டிஸ்கன்ட்டினியூ (Discontinue) செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக வருகிற செப்டம்பர் 9 ஆம் ஆம் தேதி இரவு நடக்கும் ஆப்பிளின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்விற்கு (Apple It's Glowtime Event) பின்னர், எந்தெந்த ஐபோன் மாடல்கள் டிஸ்கன்ட்டினியூ செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:

ஆப்பிள் நிறுவனம் பொதுவாகவே அதன் வருடாந்திர ஹார்ட்வேர் வெளியீட்டு நிகழ்வுக்கு பிறகு ஏற்கனவே உள்ள மாடல்களை டிஸ்கன்ட்டினியூ செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த "வழக்கம்" செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்விற்கு பிறகும் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்.9 க்கு பின் இந்த 4 iPhone-களும் Discontinue செய்யப்படும்.. ஏன்னா?

பழைய ஐபோன் மாடல்களை மட்டுமல்ல, ஆப்பிள் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்பாட்கள், ஆப்பிள் வாட்ச்கள் மற்றும் பல ஆப்பிள் தயாரிப்புகளையும் டிஸ்கன்ட்டினியூ செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற ஆப்பிள் தயாரிப்புகள் டிஸ்கன்ட்டினியூ செய்யப்படுவதில், பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. ஆனால் ஐபோன் மாடல்கள் டிஸ்கன்ட்டினியூ செய்யப்படுவதால், மார்க்கெட்டில் - மலிவான விலை நிர்ணயம் கொண்ட ஐபோன்களின் எண்ணிக்கை பாதியாக குறையும்.

ஆப்பிள் நிறுவனமானது, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் புதிய ஐபோன் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முந்தைய ஜெனரேஷன் பிளாக்ஷிப் ஐபோன் மாடல்களை டிஸ்கன்ட்டினியூ செய்து வருகிறது. அப்படியாக செப்.9 ஆம் தேதி இரவு ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் டிஸ்கன்ட்டினியூ செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஸ்டாண்டர்ட் ஐபோன் 15 மாடல்கள் (அதாவது ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ்) தொடர்ந்து வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை தவிரத்து, ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மற்றும் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மாடலும் கூட டிஸ்கன்ட்டினியூ செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 13 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட 4 மாடல்களில் ஸ்டாண்டர்ட் ஐபோன் 13 மட்டுமே தற்போது வரை வாங்க கிடைக்கும் ஒரே ,மாடலாக இருந்து வருகிறது. செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு பின்னர், இதுவும் டிஸ்கன்ட்டினியூ ஆகும் என்பது போல் தெரிகிறது. நல்ல விஷயம் என்னவென்றால்.. ஐபோன் 13 டிஸ்கன்ட்டினியூ செய்யப்பட்டால் ஐபோன் 14 மாடலின் விலை குறைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஆப்பிள் ஹப் வழியாக கிடைத்த தகவலின்படி ஐபோன் 16 மாடலின் பேஸிக் வேரியண்ட் $799 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.67,100 க்கு) அறிமுகம் செய்யப்படலாம். அடுத்ததாக உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 க்கு (அதாவது தோராயமாக ரூ.75,500) அறிமுகம் செய்யப்படலாம்.

ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,099 க்கு (சுமார் ரூ.92,300) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஐபோன் 16 சீரீஸின் ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,199 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இவை அமெரிக்க சந்தைக்கான 'லீக்டு' விலைகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டையும் போலவே - அமெரிக்க விலையுடன் ஒப்பிடும் போது - இந்தாண்டு வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் இந்திய விலையும அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ இந்தியாவில் ரூ.1,34,900 மற்றும் ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 என அறிவிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
iPhone 13 iPhone 14 Plus iPhone 15 Pro Max Might discontinue After iPhone 16 Series Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X