Home
Mobile

எல்லாம் iPhone 15 வரும் நேரம்.. iPhone 13 மீது விலை குறைப்பு.. அபாரமான இன்னொரு சலுகையும் அறிவிப்பு!

தனது குடியரசு தின சிறப்பு விற்பனையை (Independence Day Sale) முடித்த கையோடு பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது, பிக் பசாத் டமால் (Big Bachat Dhamal) என்கிற இன்னொரு விற்பனையை தொடங்கியுள்ளது. இது ஆகஸ்ட் 11 - 13 வரையிலாக, மொத்தம் 3 நாட்கள் நடக்குமென்று அறிவிக்கபட்டுள்ளது.

பிளிப்கார்ட்டின் புதிய பிக் பசாத் டமால் விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13) மாடல் மீது இரண்டு மிகப்பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று 11% என்கிற நேரடி தள்ளுபடி (Flat Offer); மற்றொன்று ரூ.61,000 வரையிலான எக்ஸ்சேன்ஞ் சலுகை (Exchange Offer).

எல்லாம் iPhone 15 வரும் நேரம்.. iPhone 13 மீது விலை குறைப்பு!

ஐபோன் 14 (iPhone 14) மாடலை வைத்துக்கொண்டு நீங்கள் வாங்கக்கூடிய சமீபத்திய ஐபோன் மாடலாக இது இருக்காது என்றாலும் கூட டிஸ்பிளே, கேமரா மற்றும் ப்ராசஸர் ஆகியவற்றின் அடிப்படையில் இது ஐபோன் 14 மாடலை போலவே தான் உள்ளது. அதாவது ஐபோன் 13 ஆனது கிட்டத்தட்ட ஐபோன் 14-இல் உள்ள அதே அம்சங்களை வழங்குகிறது, ஆனால் மிகக் குறைந்த விலையில்!

அதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுக்கு 5 ஆண்டுகள் வரை ஐஓஎஸ் அப்டேட்களை (iOS updates up to 5 years) வழங்கி ஆதரவு அளிக்கிகிறது. எனவே ஐபோன் 13-க்கு லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் கிடைக்குமா என்கிற சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்; கண்டிப்பாக கிடைக்கும்.

ஐபோன் 13 மீது கிடைக்கும் சலுகைகள்: 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் (128GB Storage Option) வரும் ஐபோன் 13 மாடலின் அசல் விலை ரூ.69900 ஆகும். இருப்பினும், பிளிப்கார்ட் வலைத்தளமானது இதன் மீது 11% என்கிற நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது ரூ.7901 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் ரூ.61999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது தவிர, ஐபோன் 13 மீது அபாரமான எக்ஸ்சேன்ஜ் சலுகையும் கிடைக்கிறது, கூடவே சில வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. இதன் மூலம் ஐபோன் 13 மாடலின் விலையை இன்னும் குறைக்க முடியும். பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 13 மீது ரூ.61,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை வழங்குகிறது.

இதற்காக நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும் உங்களுக்கு கிடைக்கும் இறுதிக்கட்ட எக்ஸ்சேன்ஜ் போனஸ் (Final Exchange Bonus) ஆனது உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் வேலை செய்யும் நிலையை பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ (Debit Card EMI) பரிவர்த்தனைகளின் கீழ் ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு (Flipkart Axis Bank Card) வழியிலான பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் ஐபோன் 13 மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை (256GB Storage Option) வாங்க விரும்பினால் - பிளிப்கார்ட் பிக் பசாத் டமால் விற்பனையின் போது - இது 9% நேரடி தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது. கடைசியாக உள்ள 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (512GB Storage Option) மீது 7% தள்ளுபடி கிடைக்கிறது.

புதிய மாடல்கள் அறிமுகமாகும் முன்னர், பழைய மாடல்களின் மீது அபாரமான சலுகைகள் அறிவிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அறியாதோர்களுக்கு ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரிஸ் (Apple iPhone 15 Series) ஆனது அடுத்த மாதம் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 13 gets Rs 7901 Discount and Massive Exchange Offer in Flipkart Big Bachat Dhamaal Sale Aug 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X