Home
Mobile

மூக்கில் விரல் வைப்பீங்க.. ரூ.60000 போயாச்சு.. ரூ.40000க்கு வந்தாச்சு.. ஐபோன் 13க்கு வரப்போகுது டிமாண்ட்!

ஆப்பிள் (Apple) பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.40,000 பட்ஜெட்டில் ஐபோன் 13 (iPhone 13) மாடலை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடிகிறது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் ஆஃபர் விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஐபோன் 13 அம்சங்கள் (iPhone 13 Specifications): இந்த ஆப்பிள் மாடலில் ஐஓஎஸ் 15 (iOS 15) வருகிறது. அதோடு எக்ஸா கோர் ஏ15 பயோனிக் 5என்எம் (Hexa Core A15 Bionic 5nm) சிப்செட் மற்றும் ஆப்பிள் ஏ15 பயோனிக் 4 கோர் ஜிபியு (கோர் Apple A15 Bionic 4 Core GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.40000க்கு வந்தாச்சு.. ஐபோன் 13 மாடலுக்கு வரப்போகுது டிமாண்ட்!

இந்த போனில் 6.1 இன்ச் (2532 × 1170 பிக்சல்கள்) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இதில் ட்ரூ டோன் (True Tone), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் வருகிறது.

அதோடு செராமிக் சீல்ட் (Ceramic Shield) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 13 மாடலில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் 12 எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இதில் சென்சார் ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor Shift Optical Image Stabilisation) மற்றும் ட்ரூ டோன் பிளாஷ் (True Tone Flash) சப்போர்ட் உள்ளது.

12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ரெடினா பிளாஷ் (Retina Flash), எச்டிஆர் (HDR) வீடியோ ரெக்கார்டிங், டால்பி விஷன் ஆகிய சப்போர்ட் வருகின்றன. இரண்டிலும் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனுக்கு IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஈ-சிம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. அதில் மேஜிக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் இருக்கிறது.

இந்த பேட்டரி 19 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கொடுக்கக்கூடியது. இந்த மாடல் ப்ளூ (Blue), பிங்க் (Pink), மிட்நைட் (Midnight), ஸ்டார்லைட் (Starlight), மற்றும் ரெட் (RED) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.60,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வருகையையொட்டி ரூ.53,999 பட்ஜெட்டுக்கு விலை குறைக்கப்பட்டது. இந்த விலையிலும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,700 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.51,299க்கு வாங்கிக்கொள்ள முடியும். இதுவே மிகப்பெரும் ஆச்சர்யமாக இருக்கும் வேளையில், அந்த போனை ரூ.40,000 பட்ஜெட்டில் வாங்க முடிந்தால் எப்படி இருக்கும்? ஆம் அதற்கு வழி இருக்கிறது.

இந்த போனுக்கு பிளிப்கார்ட்டில் தள்ளுபடி போக ரூ.37,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஒருவேளை உங்களிடம் நல்ல கன்டிஷனில் ஐபோன் 12 (iPhone 12) அல்லது சாம்சங் (Samsung) போன் இருந்தால், அதை தாராளமாக எக்ஸ்சேஞ்ச் செய்யலாம். இதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையில் போனஸ் கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ.10,000 போனஸ் கிடைத்தாலே, நீங்கள் ரூ.40,000 பட்ஜெட்டில் ஐபோன் 13 மாடலை வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 13 Available Under Rs 55000 on Flipkart With Discounts Check Specifications Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X